பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

115


கூடாது என்று ஒரு அணி, அழைக்க வேண்டும் என்று ஒரு அணி, இந்த அணியில் கிராம மக்களும் இருந்து போராடினர்.

சிங்கம்புணரி ஒன்றியம் பிரான்மலை கிராமத்தில் பிரதம சுகாதார நிலையம் அமைய நாம் முயற்சி செய்தும் நிலம் வாங்கிக்கொடுத்தும் உதவி செய்தோம். ஏன்? தொடக்கத்தில் பிரான்மலையில் உள்ள குன்றக்குடி ஆதீன மடத்திலேயே சுகாதார நிலையம் இயங்கி வந்தது. குன்றக்குடி ஆதீனத் திருக்கோயில்களில் பிரான்மலையும் ஒன்று, ஒன்றல்ல.... தலையாயது! ஆதலால், பிரான்மலை கிராமத்துக்கும் ஆதீனத்துக்கும் உள்ள வழிவழி உறவு எளிதில் அலட்சியப்படுத்த முடியாதது. பிரதம சுகாதார நிலையம் கட்டப்பட்டுத் திறப்பு விழா! அமைச்சர் ஒருவர் திறப்பு விழாவுக்கு வந்தார். விழாவுக்கு ஒப்புக் கொண்ட நாம் இல்லாமல் விழா நடத்த உட்குழு முயன்றது. குழுவின் வயப்பட்ட அமைச்சர், நம்மை அழைக்காமல் விழா நடத்த எண்ணினார். அதிகாரிகளுக்கும் உத்தரவு அப்படியே! பிரான்மலை ஊரார், திருப்பத்தூர் பயணமாளிகையில் தங்கியிருந்த அமைச்சரை அணுகி நிலைமையை விளக்கி, நம்மை அழைக்கும்படி வற்புறுத்தினர். அமைச்சர் செவி கொடுக்கவில்லை. விழா நாளும் வந்தது! பிரான்மலை கிராமத்தார் விழாவில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்து விழாவைப் பகிஷ்காரம் செய்துவிட்டனர். நாலாயிரம் மக்கள் வாழும் அந்தக் கிராமத்தார், குழந்தைகள் உட்படக் கட்டுப்பாடாக விழாவைப் புறக்கணித்தனர், . இப்படியும் ஒரு வரலாறு உண்டு, இந்த நிகழ்ச்சிகளின் நினைவுதான், அறிஞர் அண்ணாவின் பெருந்தன்மையைப் பறைசாற்றியது.

நமது மக்களாட்சி முறையில் கட்சிகள் ஆட்சி அமைக்கின்றன. ஆனால், கட்சிக்கே அரசு சொந்தமல்ல, கட்சிக்கும் கட்சிக்காரர்களுக்கும் மட்டுமே அமைச்சரவை அல்ல. நாட்டை ஆளும் அரசில் நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமையுள்ளது. அமைச்சர்கள் மக்கள் அனைவருக்கும்