பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

195


(பூதானம்) இயக்கம் தொடங்கி பாரதம் முழுவதும் பாதயாத்திரை செய்தார்.

இது ஒர் அமைதிப் புரட்சி! பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கிடைத்தன. வினோபாபாவேயின் 1956 தமிழ் நாட்டு யாத்திரையில் நாம் பங்கு பற்றினோம். தமிழ் நாட்டு எல்லையில் வரவேற்றது; தென் ஆற்காடு மாவட்டத்தில் சில நாட்கள் யாத்திரை செய்தது. ராமநாதபுரம் மாவட்ட யாத்திரைப் பொறுப்பு நம்மிடமே விடப்பெற்றிருந்தது. புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் வினோபாபாவேக்கு வரவேற்பு நிகழ்ச்சி. சாக்கோட்டை, புதுவயல், காரைக்குடி வழியாகக் குன்றக்குடிக்கு வினோபாபாவே வந்திருந்தார்.

குன்றக்குடியில் சிறப்பான வரவேற்பு. மறுநாள் திருப்புத்துரர். அங்கு நமது ஆதீனத் திருமடத்தில் தங்கல். திருப்புத்துரரில் மடத்தில் தங்கியிருந்தபோதுதான் பூதான இயக்கம் கிராமதானமாக உருவெடுத்தது. இந்தக் கூட்டத்தில் காந்திகிராமப் பல்கலைக்கழக நிறுவனர் சகோதரி டாக்டர் செளந்தரம் ராமச்சந்திரன், டி. கல்லுப்பட்டி குருசாமி நாடார், பூதான இயக்கத்தலைவர் ச. ஜகந்நாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். நாம் அன்றைய சூழ்நிலையில் கிராமதான முறையை ஏற்கவில்லை. ஏன்? ஒரு கிராமத்திலுள்ள நிலங்களில் எழுபத்தைந்து சதவிகிதம் நிலக்கொடை யாகக் கிடைத்து விட்டால், தானே கிராமதானம் ஆகிவிடும். இதுதான் முறை. நேரடியாகக் கிராமதானம் உருவாகாது. ஆனாலும் சிக்கல் இருக்கும் என்பது நமது கருத்து. ஆயினும் நீண்ட விவாதத்துக்குப் பிறகு கிராமதானம் பெறுவது என்று முடிவு செய்யப்பெற்றது.

வினோபாபாவே நம்மிடத்தில் அதிகப் பரிவு காட்டினார். ஒய்வு நேரங்களில் பூதான இயக்கச் செயல்முறை, திருக்குறள், அத்வைதம், சுத்தாத்வைதம் என்பனபற்றியெல்லாம் கலந்து பேசுவார். வினோபாபாவேயின்