பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எளிமையின் காரணமாக நம்மைப் பாராட்டுவார். "உங்கள் சக்திக்கு குன்றக்குடி மடம் நிர்வாகம் போதுமா? இன்னும் விரிந்த, பரந்த எல்லையில் பணி செய்யலாம்” என்றார். தம்முடன் பணியில் சேரும்படி அழைத்தார். நமக்கும் விருப்பம் தோன்றிவிட்டது. வினோபாபாவேயுடன் போவதாக முடிவு செய்து விட்டோம்!

மடத்தின் நிர்வாகத்தைத் திருநெல்வேலி மாவட்டம் பெருங்குளத்தில் உள்ள செங்கோல் மடத்தின் மடாதிபதியிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வதென முடிவு. பெருங்குளம் மடாதிபதிக்கும் தந்தி கொடுத்து வரவழைக்கப்பட்டு விட்டார். உரிய ஆவணங்கள் தயாரிக்கப்பெற்றுவிட்டன. அலுவலர்கள் கூட்டம் போட்டுப் பிரியாவிடை பெற்றுக் கொள்ளப்பெற்றது. காலையில் வழிபாடு முடித்துக் கொண்டு வினோபாபாவேயுடன் சேர்ந்து கொள்வதாகத் திட்டம். அன்று பூஜைக்கு எல்லா அலுவலர்களும் ஊராரும் திரளாக வந்திருந்தனர். வழிபாடு முடிந்த பிறகு ஆதீனத்தின் மேலாளராகப் பணி செய்த வி. புஷ்பவனம் என்பவரும் மற்றும் சில மூத்த அலுவலர்களும் வந்தனர். புஷ்பவனம் நல்ல நிர்வாகி. அவருக்கு அழுகை வந்தது. பேச முடியாமல் தவிக்கிறார். முயன்று தடுத்துக் கொள்வதை நம்மால் பார்க்க முடிந்தது; உணர முடிந்தது.

புஷ்பவனம் பேசத் தொடங்கினார்: "மகாசந்நிதானத்தின் விருப்பத்துக்குத் தடை சொல்லவில்லை. மன்னிக்க வேண்டும். தயவுசெய்து நன்றாக ஆய்வு செய்ய வேண்டும்" என்றார். "நமது மடத்தின் நிர்வாகத்தை இப்போது தேர்ந் தெடுக்கப் பெற்றிருப்பவரால் செய்ய இயலாது. அனுபவம் போதாது. மடத்துக்கு ஒரு நல்ல நிர்வாகியை அமர்த்தி விட்டுப் போகலாம்" என்றார். காலப்போக்கில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் இயங்கா நிலையை அடைந்தது என்பதை நோக்க வி. புஷ்பவனம் சொன்னது உண்மையா யிற்று. வேறுவழியின்றித் திட்டம் ஒத்திவைக்கப் பெற்றது. வினோபாபாவேயிடமும் நிலைமைகள் எடுத்துக்