பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

431


இது கடினம். பல சமயங்களில் வழுக்கல் ஏற்பட்டுத் தோற்றுப் போதலும் உண்டு. ஆன்மிக வாழ்க்கைக்கு இல்லறமா? துறவறமா? என்ற விவாதம் கிடையாது. இரண்டிலும் ஆன்மிக வளர்ச்சி சாத்தியமே. வாழ்பவர்களைப் பொறுத்ததே ஆன்மிக வளர்ச்சி.

ஆன்மிகம் என்பது துறவு நெறியைச் சார்ந்ததென்று பலர் கருதுகின்றனர். இது தவறு. உலகத்தை வெறுப்பது ஆன்மிகம் அல்ல; உலகத்தை அறிந்துகொண்டு, அதற்குள் வாழ்ந்து, தங்களையும், உலகத்தையும், ஒருசேர வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம். அப்பரடிகள் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியை.

"அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
          அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
          ஒரு குலமும் சுற்றமும் ஒருரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
         துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய்நீ
இப்பொன் நீ இம் மணிநீ இம்முத்துநீ
        இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே!”


என்று அருளியுள்ளமையை அறிக. எவன் ஒருவன் தன்னையும், தன்னுடைய பொறி புலன்களையும், தன்னைச் சுற்றி உள்ள உலகத்தையும், தன்வசப்படுத்திப் பயன் கொள்கின்றானோ, அவன் ஆன்மிகத்தில் வளர்ந்தவன்; உயர்ந்தவன். ஆன்மாவிற்குள் ஆசை வெள்ளம், பொறிகள் வாயிலாக வந்து புகுந்துகொண்டே இருக்கும். ஆனால் ஆன்மா அமைதியாக விளங்கும்; தேர்வு செய்யும்; ஏற்பன ஏற்கும். இதுவே ஆன்மிக வாழ்க்கையின் இயல்பு.

ஆன்மிகத்தில் வளர்ந்தவர்கள் மானுட சமூகத்தை இறைவன் ஒரு குடும்பமாக அமைத்தே வழி நடத்துகின்றான்; வாழ்விக்கின்றான்; என்று நம்புவார்கள். ஆன்மிகத்தின்