பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நினைவலைகள்

47


நம் நாட்டில் பெண்கள் வேலைக்குப் போவதால் இரண்டு கஷ்டங்கள். ஒன்று குழந்தைகளுக்காகச் செலவிட போதிய அவகாசம் இல்லை. அடுத்து, பெண்கள் இரண்டு பங்கு உழைக்க வேண்டி வருகிறது. ஏனெனில் எந்த ஆணும் வீட்டுக்குப் போய் மனைவியின் வேலையில் பங்கேற்பதே கிடையாது; நம் நாட்டில்!

இரண்டு சம்பாத்தியங்கள் மட்டும் வேண்டும் என்று இருக்கிறதல்லவா? அப்போது இரண்டுபேரும் வீட்டு வேலைகளைச் செய்யவேண்டியதுதானே? நான் தாஷ்கண்ட் போயிருந்தேன். தாஷ்கண்ட் யூனிவர்சிடியின் போஸ்ட் கிராஜுவேட் மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல், தாஷ்கண்ட் யூனிவர்சிடியின் வைஸ் சான்சலர் என்னை விருந்துக்கு அழைத்திருந்தார். . அவருடைய மனைவி டைரக்டர் ஆஃப் மெடிக்கல்ஸ், அப்போது அவர்களிடம் நான் கேட்டேன்: “இரண்டு பேரும் இப்படி முக்கியமான வேலை பார்க்கறீங்களே... வீடு என்ன ஆகிறது?”

அவர் சொன்ன பதில் எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

"எங்கள் இரண்டு பேரில் யார் முதலில் வீட்டுக்குப் போகிறோமோ, அவர்கள் சமையல் வேலையை ஆரம்பித்துவிடுவோம்,” என்றார்.

இதுபோன்ற முன்னேற்றம் நம் நாட்டிலும் வந்தால் எத்தனை நன்றாய் இருக்கும்!

ஏன் வந்தீர்கள்?

சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்குள் நுழைவதற்குப் பாஸ்போர்ட் வைக்கலாமே என்பது என் கருத்து. ஏன் நகரத்துக்குள் நுழைகிறான் என்று கேள்வி கேட்க