பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும். கிடுக்கிப் பிடி போடவேண்டும். அப்போதுதான் நகரங்களில் அனாவசியமாக ஜனத்தொகை பெருகாது.

என்னால் முடியாதது எது?

நான் நேரந் தவறாமையை மிகவும் ஒழுங்காய்க் கடைப் பிடிப்பவன். ஆனால் நம் இந்தியாவில் இந்தச் சமாச்சாரம் ரொம்ப கஷ்டம். எவ்வளவுக்கெவ்வளவு காலதாமதமாய் ஒரு பிரமுகர் வருகிறாரோ, அவர் அவ்வளவுக்கவ்வளவு பெரிய மனிதர் என்று நினைக்கிறார்கள். இதுமாறி, பெரிய மனிதர்கள் எல்லாம் நேரம் தவறாமையைக் கடைப் பிடிக்க ஆரம்பித்து விட்டார்களென்றால் இளைஞர்களுக்குத் தானாக அந்தப் பழக்கம் தொற்றிக் கொள்ளும்.

இரண்டு மாதங்களுக்குமுன் பேராவூரணியில் ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். முதலில் அரை மணி நேரம் தாமதமாய்த் துவங்க அனுமதி கேட்டார்கள். சரியென்று கொடுத்தேன். சம்பந்தப்பட்டவர்கள் வரவில்லை. பிறகும் வந்து இன்னொரு அரை மணிநேரம் வேண்டும் என்று கேட்டார்கள். நான், 'என்னால் அப்படியெல்லாம் காத்திருந்து நேரத்தை வீணாக்கிக் கொள்ள முடியாது' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு ஊருக்கு வந்துவிட்டேன்.

குடும்பக் கட்டுப்பாடு!

ன்மீக மனமகிழ் பொழுது போக்கெல்லாம் நம் கிராமப்புறங்களில் பெருகாத வரையில், அது ஏழை ஜனங்களை எட்டாத வரையில், அவர்களுடைய வாழ்க்கைத் தரம் கொஞ்சமும் கூடாத வரையில், குடும்பக் கட்டுப்பாடு அங்கே சாத்தியமில்லை. ஏனெனில், ஆண் பெண் உறவைத் தவிர வேறு மகிழ்ச்சி எதுவுமே அவனுக்கு இல்லை. மகிழ்ச்சி, களிப்பு என்பது மனிதனுக்குத் தவிர்க்க முடியாத தேவை.