உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கு று ங் தொ ைக க்

93 - ம லை யு ம் ம ன மும்

|

மலேச் சாரலில் மயில் தோகை விரித்து ஆடுகிறது. மழை பொழிகிறது. குளிர் நடுக்குகிறது. குரங்கு தன் குட்டியைக் கட்டிக்கொண்டு குளிரில் கடுங்குகிறது.

இத்தகைய மலை நாட்டு இளைஞன் ஒருவன், பொருள் தேடும் பொருட்டு வெளியூர் செல்கிருன். -

போய் வருகிறேன்’ என்றான் அவன்.

‘போய் வா’ என்றாள். வருத்தம் தொனித்தது குரலிலே.

‘இப்பொழுதே உனது நெற்றி பசலே பாய்ந்து விட்டதே. அவர் வருமளவும் எப்படி ஆற்றியிருப்பாய் ?’ என்று கேட்டாள் தோழி.

“அதோ பார் அவருடைய மலே. அதைப் பார் இதோ பார் ! எனது நெற்றியை பழையபடி ஒளியுடனிருக்கிறதல்லவா! இப்படியே அந்த மலேயைப் பார்த்துப் பார்த்து ஆற்றியிருப்பேன். மலேயைப் பார்க்கும்போது தலைவனேயே பார்த்ததாக எண்ணி மகிழ்வேன்’ என்றாள்.

இன மயில் அகவும் மரம் பயில் கானத்து, கரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப, படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக் குன்றம் நோக்கினென் - தோழி! - பண்டையற்றாே, கண்டிசின், நுதலே ?

-கபிலர்

94. காதலும் கனியும்

“மலே நாட்டிலே பலா காய்த்துத் தொங்குகிறது. மரத்திலும், கிளையிலும் ஒன்றாகத் தொடுத்து வைத்ததுபோல் தொங்குகிறது. இனிய பலா எப்படி மரம் விட்டு நீங்காது எங்கும் காய்த்துத் தொங்குகிறதோ அந்த மாதிரிதான் காதலும் முகிழ்க்கிறது.