உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 123

கணக்கு ஆய் வகையின் வருந்தி, என் நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே.

-கழார்க் கீரன் எயிற்றி

97. காதல் பேயும் கிராமப் பூசாரியும்

“பூசாரி வந்தாரா?” வந்திருக்கிறார்’ “என்ன பூசாரி. இந்தப் பெண் என்ன ஒரு மாதிரியாக இருக்கிருளே’

  • அப்படியா சரி. வருகிற ஞாயிற்றுக்கிழமை ஆட்டிப் பார்த்து விடலாம்’

பேய் பிடித்திருக்குமோ ?” ‘இல்லாவிட்டால் ஏன் இப்படி யிருக்கு ?” *சரி. ஆட்டுவதற்கு ஆற்றங்கரையிலே ஏற்பாடு செய்’ சரி. ஆடு வெட்ட வேண்டுமே !’ செய்ய வேண்டியதுதான்’ இந்த விதமாகப் பூசாரி பேச்சுக் கேட்டாள் தாய். அவளது மகளோ காதல் நோயால் வாடுகிருள். பேயுமல்ல; பிசாசுமல்ல. பிடித்திருப்பது காதல் பேய். அதற்கு மருந்து பூசையல்ல; பூசாரியுமல்ல. ஆடு வெட்டவும் வேண்டுவதில்லே. ஆனல் பாவம் ! அப்பாவியான தாய் ! அறியாமையாலே என்ன என்ன வோ செய்கிருள்.

இதைத்தான் தோழி சொல்லுகிருள். அவளது காதலனுக்கு. அதாவது என்ன ? விரைவில் வந்து கலியாணம் செய்ய வேண்டும் என்பதே.

மறிக் குரல் அறுத்து, தினேப் பிரப்பு இரீஇ செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க, தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா வேற்றுப் பெருங் தெய்வம் பல உடன் வாழ்த்தி, ‘பேஎய்க் கொளிஇயள் இவள் எனப்படுதல் நோதக்கன்றே - தோழி! - மால் வரை