உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 283

அடங்கி நடக்கிறேன். ஆனல் காதலர் என்ற பேச்சுக்கு இட மில்லை. எனவே ஊடலுக்கும் இடமில்லை.”

கல் நலம் தொலேய, கலம் மிகச் சாஅய், இன் உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ ? புலவி அஃது எவனே, அன்பிலங்கடையே !

  • -அள்ளுர் கன்முல்லையார்

395. அம்மையும் பொம்மையும்

ஆடல் மகள் ஒருத்தி. அவள்மீது ஆசை கொண்டான் ஒருவன். அவனே பெரும் செல்வன். கில புலங்கள் மிக உள்ள வன். சில காலம் அந்த ஆடல் மகள் வீட்டிலே தங்கின்ை. இன்பமாக இருந்தான். நீண்டகாள் அப்படி இருக்க முடியுமா ? முடியாது. அவனே கலியாணம் ஆனவன். மனைவி இருக்கிருள். எனவே என்றாவது ஒருநாள் மனைவி வீட்டுக்குத் திரும்ப வேண்டியவன்தானே. திரும்பிவிட்டான். வந்தவனேக் கண்டாள் அவனது மனைவி. ஊடல் கொண்டாள். சிறிது நேரம் சென்றது. ஊடல் தணிந்தாள் அவள். அமைதி கிலவியது. குடும்பத்திலே இன்பம் தோன்றியது. மறுபடியும் அவன் அந்த ஆடல் மகள் வீட்டு வாசல் நாடவில்லை.

ஆடல் மகள் வீட்டிலே வம்பர் மகாசபை கூடிற்று. என்னடி ! என்னவோ பிரமாதமாகச் சொன்னியே!” என்றாள் ஒருத்தி.

என்ன சொன்னேன் ?” ‘அந்தப் பெரிய மனிதரை வலைவீசிப் பிடித்து விட்டேன் என்றாய். பொடி போட்டு மயக்கிவிட்டேன் என்றாய். என்மீது மோகம் கொண்டுவிட்டார் என்றாய். இப்போ எங்கே அவர் ?” “அதை ஏன் கேட்கிருயடீ இங்கே இருந்தபோது அவன் என்ன என்னவோ பேசினன். கண்ணே !’ என்றான். கண் மணியே 1’ என்றான். உன் மேல் உயிர் என்றான்......”

  • நீ அதை மெய் என்று நம்பினுயாக்கும்’