உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 1 கு று ங் .ெ த ைக க்

அது கொல் ! தோழி! காம நோயே! வதி குருகு உறங்கும் இன்நிழல் புன்னே உடை திரை திவலை அரும்பும் தீம் நீர் மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே !

-நரி வெரூஉத்தலையார்

336. இரவும் ஏக்கமும்

காதலன் ஒருவன் ; காதலி ஒருத்தி. இருவரும் சிலநாள் இன்பமாக இருந்தனர். இது எவருக்கும் தெரியாது. களவு ஒழுக்கம். எத்தனை நாள் இப்படி இருத்தல் இயலும் மணம் செய்துகொள்ள வேண்டாமா? பரிசம் போடப் பணம் கொண்டு வருகிறேன் ” ஏன்று கூறின்ை அவன். “எப்போ ?” என்றாள் அவள். ‘விரைவில்” என்றான் அவன். சரி. போய் வா’ என்றாள். நாட்கள் சென்றன. வாரங்கள் ஓடின. மாதங்கள் ஆயின. அவன் வரவில்லை. ‘இன்று வருவான் ; இன்று வருவான்’ என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தாள் அவள். அவன் வந்தால்தானே ! வரவில்லை. என்ன செய்வாள் பாவம் ! ஏங்கிள்ை. தூக்கம் வரவில்லை. எந்த நொடியில் அவன் வரு வானே என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள். உள்ளம் துடிக்கிறது. அவதிப்படுகிருள்.

“ஏன் இப்படி அவதிப்படுகிறாய்?’ என்று எவராவது கேட்டால்தானே ! எவரும் கேட்கவில்லே.

அருகில் உள்ள தனது தோழியைப் பார்க்கிருள். அவளே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குகிருள்.

வெளியே எட்டிப் பார்க்கிருள். ஒரே இருள். நடு நிசி. அமைதி ! அமைதி ! எங்கும் அமைதி ! ஆள் நடமாட்டமே இல்லை. பேச்சுக் குரல்கூடக் கேட்கவில்லை.