உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 317

எல்லாரும் தூங்குகிறார்களே ! அந்தப் பாழும் தூக்கம் எனக்கு வரவில்லையே!” என்று ஏங்குகிருள்.

ஐயோ! எங்கும் அமைதி நிலவுகிறதே! என் மனம் மாத்திரம் அமைதி யில்லாதிருக்கிறதே! என்ன செய்வேன் 1” என்று புலம்புகிருள்.

‘கள்’ என்று அன்றே யாமம்! சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று நனந்தலே உலகமும் துஞ்சும் ! ஒர் யான் மன்ற துஞ்சா தேனே !

-பதுமஞர்

387. கரவும் கற்பும்

நேராகத் தன்னுடைய மனைவியின் விட்டுக்குப் போகப் பய தான் அவன். காரணம் என்ன ? நீண்ட காலம் பிரிந்து விட் டான். பிரிந்து எங்கே சென்றான் ? ஆடல் மகளிர் வீடு சென் ருன். அங்கேயே தங்கி விட்டான். பிறகு ஒரு நாள் திரும்பி ன்ை. மனேவி கோபிப்பாளோ என்ற பயம். எனவே, அவளது. தோழியைக் கண்டான்.

“எங்கே சென்றாய்?’ என்றாள் அவள்.

‘அப்படி...சிறிது இன்பமாகப் பொழுது போக்கினேன்.” என்றான்.

‘நீ அங்கே இன்பமாக இருந்தாய். ஆனல் அவளோ. இங்கே துன்புற்றாள்.”

“அப்படியா ! என் மீது மிகுந்த கோபமாக இருக்கிருளோ ?”

‘உம். அவள் போல் ஒரு பெண்ணே எங்குமே நீ காணல் முடியாது’’

என்ன அப்படிச் சொல்கிறாய்?”

‘ஆம். அப்படித்தான். வாய் திறக்கவில்லே அவள். உன் &னப்பற்றி ஒரு வார்த்தை கூட வெளியே சொல்லவில்லை. உன் செயல் கண்டு வெட்கினுள். தனது துக்கத்தை மனத்திற்க்குள் ளேயே வைத்து வருந்தினள். இளைத்தாள். மெலிந்தாள். மாங்