பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 3 19

அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப! இம்மை மாறி மறுமை ஆயினும், நீ ஆகியர் எம் கணவனே; யான் ஆகியர் நின் நெஞ்சு கேர்பவளே.

-அம்மூவஞர்

339. மனமும் மாலையும்

கதிரவன் மறைந்தான். பறவைகள் தம் கூடு நோக்கிப் பறந்து செல்கின்றன. கூட்டிலே விட்டு வந்த குஞ்சுகளுக்காக இரையை வாயிலே கவ்விச் செல்கின்றன.

கண்டாள் அவள், காதலன் வரவில்லையே என்று ஏங்கி ளுள்; கண்ணிர் வடித்தாள்.

“ஏன் அழுகிறாய் ?’ என்று கேட்டாள் தோழி.

“அதோ பார்’ என்றாள். ஆகாயத்தைச் சுட்டிக் காட்டினள்.

“ஆமாம் மாலே வந்து விட்டது. பறவைகள் கூட்டில் அடைகின்றன’’

“ஆல்ை அவர் வரவில்லையே!” என்றாள். கண்ணிர் வடித்தாள்.

ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து . அளியதாமே - கொடுஞ் சிறைப் பறவை, இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த பிள்ளே உள்வாய்ச் செரீஇய இரை கொண்டமையின், விரையுமால் செலவே.

-தாமோதரன்

340. அன்று மறைவிலே! இன்று மன்றத்திலே

“அடியே கான் என்னடி செய்வேன்? இன்னும் அவர் வரவில்லையே வரைந்து செல்லவில்லையே! நான் இங்கேயிருக் கிறேன். அவரோ அங்கே இருக்கிறார். எனது பெண்மையோ