பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 381

தந்தி கொடுக்கிற விஷயம் இருக்கிறதே. இது முன்னேற் பாட்டின்படியேதான் நடக்கும். அதாவது எப்படி ?

‘இரவு நேரத்திலே நீ வந்து காத்திருக்கிறாய் என்பது எனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்பாள் அவள்.

“கவலைப் படாதே; தென்னே மரத்திலே உள்ள தேங்கா யைப் பறித்துக் கிணற்றிலே போடுவேன். நான் வந்திருப்ப தற்கு அடையாளம் அதுவே” என்பான் அவன்.

“ஆமாம்! அதுதான் நல்ல யோசனை. ஆனல் சப்தம் கேட்டு எல்லாரும் விழித்துக் கொண்டால்......?’’

‘அசடே! விழித்துக் கொள்வார்களா ? காற்றிலே தேங்காய் கெற்று விழுந்திருக்கிறதாக்கும் என்று கினைத்துக் கொள் வார்கள்’’

பேஷ்! பேஷ்’ என்பாள்.

இவ்விதமாகப் பேசி முடிவு பண்ணியதுதான். எனவே, அவன் தேங்காயைத் தள்ளியதும் அவள் வருவாள் என்று எதிர் பார்ப்பான்.

அவளோ வரமாட்டாள். காரணம் என்ன? சிறிது நேரம் முன்புதான் அந்தமாதிரி ஒரு சப்தம் கேட்டிருக்கும். காதலன் வந்துவிட்டான்’ என்று எண்ணி ஆசையோடு வந்து பார்த்திருப் பாள். காதலனைக் கண்டிருக்கமாட்டாள். காற்றிலே உதிர்ந்த தென்னே நெற்று ஒன்று கிணற்றிலே விழுந்து கிடக்கும். பார்த்து ஏமாந்து அவள் படுத்திருப்பாள்.

மீண்டும் அம்மாதிரி ஒசை கேட்டால் என்ன எண்ணம் தோன்றும்? சரிதான், மீண்டும் காற்றிலே உதிர்ந்து விழுகிறது. முன் போலத்தான்’ என்ற எண்ணம் தோன்றும் அல்லவா ? அவ்விதம் எண்ணி பேசாதிருப்பாள்.

‘வருவாள் வருவாள்’ என்று எதிர்பார்த்து ஏமாறுவான் அவன். அவள் வரமாட்டாள்.

‘சி மூன்று எதிரிகளையும் வென்று விட்டோம். காவலரைக் கடந்து வந்தோம். நாயைக் கடந்து வந்தோம். நிலவை வென்