பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5382 குறுங் தெ ைக க்

ருேம். இப்போது காலாவது எதிரி ஏற்பட்டுவிட்டதே’ என்று மனம் உடைந்து போவான்.

நான்காம் எதிரி எது? தென்னை நெற்று. காற்றிலே உதிர்ந்த நெற்று கிணற்றிலே விழுந்தது. அவளே ஏமாற்றி விட்டது. அவனேயும் ஏமாற்றிவிட்டது. குறி தவறியது. இதற்குத்தான் அல்ல குறிப்படுதல் என்று சொல்வார்கள்.

அன்று திரும்பி விடுவான். மறுநாள் மிக ஜாக்கிரதையாக வருவான். காவலரை வென்று விடுவான்; நாயை வென்று விடு வான்; நிலவை வென்றுவிடுவான்; தென்னே நெற்றையும் வென்று விடுவான்.

ஆனல் ஐந்தாவது எதிரியாக ஏற்படுவாள் செவிலித்தாய். அவள் துரங்கமாட்டாள். விழித்துக்கொண்டிருப்பாள். எனவே, அன்றும் தலைவி வெளியே வரமுடியாது. எப்படி வரமுடியும்? தாய் விழித்துக் கொண்டிருக்கிருளே. வரலாமா? எங்கே போகி ருய்?’ என்று கேட்பாளே! என்ன பதில் சொல்ல முடியும்?

அன்றும் ஏமாறுவான் அவன். திரும்பிப் போவான்.

எஇன்று செவிலித்தாய் ஏற்பட்டாள் எதிரியாக’ என்று நொந்துகொள்வான்.

மறுநாள் வருவான். காவலரைக் கடந்து விடுவான் ; நாயைக் கடந்துவிடுவான்; நிலவு வெளிப்படுமுன் வந்து விடு வான். செவிலித்தாயும் தூங்கி விடுவாள். தந்தி அடிப்பான். மெதுவாகக் கதவு திறந்துகொள்ளும். வெளியே வருவாள். கட்டி அணைப்பான். இன்புறுவான். கேரம் ஆகிவிடும். அவ ளும் செல்வாள். அவனும் செல்வான்.

இப்படிச் சில காலம் நடக்கும். எவ்வளவு காள் இப்படி கடக்கும்? நீண்ட நாள் நடவாது.

களவு ஒழுக்கத்திலே ஈடுபட்டிருப்பதால் அவளது தோற்றத் திலே சில மாறுதல்கள் ஏற்படும். எவளது தோற்றத்தில் காதலி யின் தோற்றத்திலே, என்ன மாறுதல் ?