உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 47

பொறுத்து ஆற்றி யிருக்கிறேன். அப்படி யிருக்க நீ ஏன் வருந்து கிறாய் ? வருந்தாதே.’’ என்றாள் அவள்.

வருந்த வேண்டியவள் அவள். ஆனால், வருந்துகிறவளோ தோழி. தோழிக்குச் சமாதானம் சொல்கிருள் அவள்.

இவ்விதம் அவளைப் பிரிந்து சென்றவன் எவன் ? மலே காடன். சுர சுரப்பான பாறைகள் மிக்க மலே நாடன். சுர சுரப் பான அந்தப் பாறைகள் எக் காட்சி வழங்கும்? யான படுத்து உறங்குவது போன்ற காட்சி வழங்கும்.

அந்தப் பாறையிலே கொடி படர்வது, யானே மீது கொடி படர்வது போலிருக்கும். அத்தகைய மலே நாடனே அவளது காதலன். துறுகல் அயலது மாண மாக்கொடி, துஞ்சு களிறு இவருங் குன்ற நாடன் நெஞ்சு களனுக யேலென் யான் என கல்தோள் மணந்த ஞான்றை மற்று அவன் தாவா வஞ்சினம் உரைத்தது நோயோ? தோழி! நின் வயினனே.

-பரனர்

21. மயிலின் முட்டையும் மந்தியின் குட்டியும்

“ விரைவில் வருவேன்’ என்று கூறிப் போனன். குறித்த காலமும் வந்தது. ஆனால், அவன் வரவில்லை. ‘ இன்று வருவான்; நாளை வருவான்’ என்று எண்ணி ஆற்றி யிருந்தாள் அவள். நாட்கள் சென்றன. அவன் வரவில்லை.

சிந்தனையில் ஆழ்ந்தாள். அந்த நேரத்திலே அவளது சிந்தையைக் கவர்ந்தது ஒன்று. அது என்ன ? கருங் குரங்கின் குட்டி, அந்தக் குரங்குக் குட்டி விளையாடியது. எதை வைத்துக் கொண்டு விளையாடியது ? பாறையிலே மயில் ஈன்ற முட்டை. அதை உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது குரங்குக் குட்டி, அதைக் கண்டதும் அவளுக்குத் தன் காதலனின் மீது ஏக்கம் அதிகரித்தது. கண்கள் நீர் சொரிந்தன.