உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

சமீபத்திலே புதியதொரு வேகம் தோன்றியுள்ளது. என்ன வேகம் ? மலிவுப் பதிப்பு வேகம் : மக்கள் பதிப்பு வேகம்.

பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் மலிவுப் பதிப்பாக வரு கின்றன ; ஏராளமாக வருகின்றன ; போட்டி போட்டுக்கொண்டு வெளிவருகின்றன.

குறைந்த வில; நிறைந்த பக்கங்கள்; அழகான அச்சு ; கண் கவரும் தோற்றம், எல்லாவற்றையும் பார்க்கிறார்கள் மக்கள். ஆர்வம் உண்டாகிறது. ஆசை பிறக்கிறது.

என்ன ஆர்வம்? என்ன ஆசை பழந்தமிழ் இலக்கியங் க3ளப் படித்து அறிதல் வேண்டும் என்ற ஆர்வம்; வாங்க வேண் டும் என்ற ஆசை. விலேயோ மலிவு: வாங்காமல் என்ன செய் வார்கள் ? வாங்குகிறார்கள்.

ஆனல், வாங்கியபிறகோ கிலேமை என்ன ? பாவம் விழிக் கிறார்கள். அவர்களது ஆர்வம் முறிந்து போகிறது; ஆசை தகர்ந்து போகிறது.

காரணம் என்ன ? காரணம் சொல்லவா வேண்டும்? மக்கள் பதிப்பு’ என்பன எல்லாம் மக்கள் பதிப்பு அல்ல. ! இதுவே. காரணம்.

‘மக்கள் பதிப்பு என்று சொல்வோர் என்ன செய்கின்றனர்? மறந்து விடுகின்றனர். எவரை மக்களே. தாங்கள் வெளியிடும் மக்கள் பதிப்பு எவர் பொருட்டு வெளியிடப் படுகிறது என்பதை மறந்து விடுகின்றனர். மக்கள் பதிப்பு யாருக்காக ? இதுபற்றிச் சிந்திப்பதில்லை.

பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் எப்போ தோன்றின ? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு தோன்றின.

பின்னே பல நூற்றாண்டுகள் சென்றன. இலக்கியங்களுக்கு உரை எழுந்தன; உரையாசிரியர்கள் தோன்றினர்கள்.