உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

உரைகள் ஏன் எழுந்தன ? உரையாசிரியர்கள் ஏன் தோன் றினர்கள் ? பழந்தமிழ் இலக்கியங்கள் பலர்க்கும் விளங்காமற் போயின. ஏன் விளங்காமற் போயின ? சொற்கள் ஆட்சியில் இல்லை. வழக்கில் இல்லே. எனவே விளங்காமற் போயின. உரைகள் தோன்றின. உரையாசிரியர்கள் தோன்றினர்கள். வழக்கச் சொல்லிலே உரை தந்தார்கள்.

அந்த உரைகளும் இப்போது யாருக்கு விளங்கும் ? தமிழ் அறிந்த பண்டிதர்களுக்கே விளங்கும். ம ற் ைற யோர் க் கு விளங்கா. காரணம் என்ன ? அந்தச் சொற்கள் இப்போது ஆட்சியில் இல்லே ; வழக்கில் இல்லை.

மக்கள் பதிப்பு வெளியிட முன் வருவோருள் பலர் என்ன செய்கின்றனர் : பழந்தமிழ் இலக்கியங்களே அப்படியே வெளி யிடுகின்றனர்.

பாடல்களோ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு பாடப்பட்டவை. அக்காலத்திலே வழங்கிய சொற்களைப் பெய்து பாடியவை. அச்சொற்கள் எல்லாம் வழக்கிறந்தன. இன்று எவர்க்கும் விளங்கா,

அந்த உரைகளோ பல நூற்றாண்டுகள் முன்பு தோன்றி யவை. அக்காலத்திலே ஆட்சியில் உள்ள சொற்கள் இக்காலத் தில் ஆட்சி பெறவில்லை. எனவே அவையும் இன்று விளங்க மாட்டா.

எனவே, மக்கள் பதிப்பு’களில் பல, மக்கள் பதிப்பாக இல்லை ; பண்டிதர் பதிப்பாகவே இருக்கின்றன. பண்டிதர் பதிப்பு மக்களுக்கு விளங்குமா ? விளங்காது விளங்காது. பண்டிதர்களுக்கே விளங்கும்.

விளக்கமாக உரை எழுத முன் வருகின்றனர் சிலர். அவ ரும் என்ன செய்கின்றனர்?. சம்பிரதாயமான முறைகளேயே பின் பற்றுகின்றனர். பதவுரை பொழிப்புரை, கருத்துரை வழங்கு கின்றனர். இவ்வுரை எதற்கு எவருக்கு ? மக்களுக்கா ? மாண வருக்கா ?