உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கு று க் .ெ தா ைக க்

மறு கால் பயிரின் பலனைப் பெறுவதற்கு அரிவாளுடன் வந்திருக் கிருன் குறவன்.

கண்டாள் அவள். கண்ணிர் விட்டாள்.

‘ஏன் வருந்துகிறாய்?’ என்று கேட்டாள் தோழி.

“அதோ பார்’ என்றாள்.

‘என்ன அங்கே ?’’

‘அந்தக் குறவனைப் பார். ஒரு கால் பயன் பெற்றான். இப் போது மறுகால் பலன் பெற வந்து விட்டான்’

  • அதற்கு என்ன ?”

‘அந்த அளவுக்குக் கூட எனக்கு இன்ப மில்லேயே ஒரு கால் இன்பம் துய்த்துச் சென்ற என் காதலர் மறு கால் இன்பத் துக்கு இன்னும் வரவில்லையே 1’ என்றாள். ‘கோ’ என்று அழுதாள்.

‘அழாதே’ என்றாள் தோழி.

“அழுதேன். அழாதே என்று சொன்னர் அவர். கண்ணிர் விட்டேன். கண்ணிரைத் துடைத்தார். கூந்தலைக் கோதினர். இப்போது அப்படிச் செய்ய யாரடி இருக்கிறார் ?’ என்றாள்.

வார் உறு வணர் கதுப்பு உளரி, புறஞ் சேர்பு, ‘அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார்; யார் ஆகுவர் கொல்? - தோழி! - சாரல் பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால் கொழுங் கொடி அவரை பூக்கும் அரும் பனி அற்சிரம் வாராதோரே.

-கடுவன் மள்ளன்

28. காளை மணியும் காதல் மனமும்

கூதிர் காலம். பிசு பிசு’ என்று மழை தூறிக் கொண்டிருக் கிறது. வாடைக் காற்று வீசுகிறது. குளிர் ! குளிர் 1 இரவு நேரம் ! நடுநிசியாகியும் அவளுக்குத் தூக்கம் வரவில்லே. படுக் கையில் புரண்டு கொண்டே யிருக்கிருள். அடிக்கடி மணியோசை கேட்கிறது. மணி ஓசை எங்கிருந்து வருகிறது? காளே மாட்டின்