உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 75

களேத் தேடிச் சென்று உண்ணும். ஆனால், நிழல் தரும் மூங்கில். அதை மறவாது வந்து படுத்துறங்கும்.

“அதேமாதிரி முதுமையிலே இவள் உனக்குப் பயன்பட மாட்டாள். எனினும் இவளது அன்பை மறவாதே ! ஆதரவை மறவாதே நிழலே மறவாதே! நீங்காது இவளுடன் வாழ்வாயாக’ எப்பேர்ப்பட்ட வாழ்த்து ! பொருள் செறிந்த வாழ்த்து ! திருமண வாழ்த்து !

பெரு நன்று ஆற்றின், பேணுரும் உளரே ! ஒரு கன்று உடையள் ஆயினும், புரி மாண்டு, புலவி தீர அளிமதி-இலே கவர்பு, ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல், மென்கடை மரையா துஞ்சும் நன் மலை நாட!-கின் அலது இலளே.

-கபிலர்

47. காவிரியும் காதலியும்

காவிரி ஆற்றின் கரையிலே ஒரு பெண் நின்றுகொண்டிருந் தாள் தனியாக. தனது கூந்தலே விரித்து ஆற்றிக் கொண்டிருந் தாள்.

அவளேக் கண்டான் ஒருவன். காதல் கொண்டான்! அடுக்கு அடுக்காகத் தோன்றிய கருங் கூந்தல் அவனைக் கவர்ந்தது.

அதே சமயத்தில் காவிரி ஆற்றையும் நோக்கினன். கொஞ்ச காலம் முன்புதான் காவிரி பெருக்கெடுத்து ஒடினள். கொஞ்சம் கொஞ்சமாக நீர் வற்றியது. கருமணல் அடுக்கு அடுக்காகப் படிந்தது ஆற்றிலே.

காவிரி ஆற்று மணலேயும், அந்தக் காரிகையின் கூந்தலையும் மாறி மாறிப் பார்த்தான் அவன்.

ஆகா! என்ன அழகு 1 என்ன அழகு!’ என்று சொல்லிக் கொண்டே அருகில் நெருங்கினன்.

‘கம்’ மென்று மணம் வீசியது. தலையிலே வாசன திரவியங்