உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 89

‘நன்று நன்று என்னும் மாக்களோடு இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே.

-வெள்ளிவீதியார்

6 1 . மார் பு ம் ைம ய லு ம்

“இனி இரவு நேரத்திலே வரலாம். வுேண்டிய ஏற்பாடு செய்து வைக்கிறேன்” என்று சொன்னுள் தோழி, ‘சரி அப்படியே ஆகட்டும்” என்றான் அவன். அதை வந்து அவளிடத்திலே கூறிள்ை. கேட்டாள் அவள். மிகுந்த மகிழ்ச்சி கொண்டாள். அதைத் தன் தோழிக்கு அறிவிக் கிருள். எப்படி? “ரொம்பச் சரி வரட்டுமே!’ என்றாளா ? இல்லை. பின் என்ன சொல்கிருள். குறிப்பாக உணர்த்துகிருள். “அவரது மார்பு இருக்கிறதே. அதன் பெருமையை என்ன என்று சொல்வேன் கான், அதை நினைக்க நினைக்கக் காம நோய் வளர்கிறது. கட்டி அணேத்தாலோ போய்விடுகிறது” என்கிருள்.

சேணுேன் மாட்டிய நறும் புகை ஞெகிழி வான மீனின் வயின்வயின் இமைக்கும் ஓங்கு மலேநாடன் சாந்து புலர் அகலம் உள்ளின், உள் நோய் மல்கும்; புல்லின், மாய்வது எவன்கொல் ?-அன்னய் !

-மாடலூர் கிழார்

62. கோழி முட்டையும் காதலும்

“என்ன இருந்தாலும் சரி. இந்த மாதிரி நினைத்து நினைத்து உருகுதல் கூடாது’ என்றாள் தோழி.

‘அடேடே இவளுக்குக் காதல் என்றால் என்ன என்றே தெரியாது போலிருக்கு. நினைத்து நினைத்து உருக வேண்டும். உருக உருகத்தான் காதல் வளரும்’

“அப்படியா? உருகு ; உருகு”