அணில் - அணு
9
சாதாரணமாகப் பார்க்கும் அணிலின்
முதுகில் மூன்று வெள்ளைக் கோடுகள்
உண்டு. உடலில் புள்ளிகளும், கோடுகளும்
உள்ள வேறுவகை அணில்களும் உள்ளன.
அணிலின் மயிர் மெத்தென்று இருக்கும்.
இதனுடைய நீண்ட வால், மயிர்
அடர்ந்து தினைக் கதிர்போலக் காணப்படும்.
அணில் கிளைக்குக் கிளை தாவியோடும்
போதும், தலைகீழாக இறங்கும்போதும்
உடலைச் சமநிலையில் வைக்க இந்த வால்
உதவுகிறது. பழம், விதை, கொட்டை,
குருத்து, இலை ஆகியவற்றை அணில் தின்
னும். பின்கால்களில் உட்கார்ந்துகொண்டு,
முன்கால்களால் இரையைப்
பிடித்து
அணில் கொறிக்கும்போது பார்க்க அழகாய்
இருக்கும். சிலவகை அணில்கள் பூச்சிகளை
யும், பறவைகளின் சிறு முட்டைகளையும்,
குஞ்சுகளையும் தின்னும்.
அணில் சாதாரணமாக மரத்தில்
வாழும். மரக்கிளை, பொந்து, வீட்டுச்சுவர்
ஆகிய இடங்களில் இலை, புல், வைக்கோல்,
நூல், பஞ்சு ஆகியவற்றால் கூடு கட்டும்.
சிலவகை அணில்கள் நிலத்திலுள்ள குழி
களில் வாழ்கின்றன. அணில்கள் பழங்களைக்
கடித்துக் கடித்து வீணாக்கிவிடும்.
பறக்கும் அணில் என்றொரு வகை
உண்டு. இதனுடைய முன்கால்களிலும்
பின்கால்களிலும் பக்கப்புறமாக மெல்லிய
தோல் இணைந்திருக்கும். நான்கு கால்களை
யும் அகலப் பரப்பித் தோலை விரித்து
இந்த அணில் 70 அல்லது 80 கஜ தூரம்
அப்படியே காற்றில் மிதப்பது போலச்
செல்லும்.
எகிப்து, அரேபியா, ஆஸ்திரேலியா,
மலகாசி தவிர மற்ற எல்லா நாடுகளிலும்
அணில் வாழ்கிறது. துருவப் பிரதேசங்
களில் வாழ்வதில்லை.
9
அணு: நம்மைச் சுற்றிலும் எத்
தனையோ வகையான பொருள்கள் காணப்
படுகின்றன. மரம், செடி, கொடி,விலங்கு,
தண்ணீர், மண், கல் இப்படி எத்தனையோ
இருக்கின்றன.
இவை ஒவ்வொன்றும்
உண்டாவதற்குச் சில பொருள்கள் அடிப்
படையாக உள்ளன. அவற்றிற்குத் தனி
மங்கள் என்று பெயர். இரும்பு, செம்பு,
தங்கம், கார்பன் (கரி), ஆக்சிஜன் போன்ற
நூற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் இருப்ப
தாக ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்
கள். ஒரு தனிமத்தின் மிகமிகச் சிறிய
பகுதிக்கு அணு என்று பெயர்.
சிறு
தொடர்ந்து
ஒரு சிறு இரும்புத் துண்டை எடுத்து
அதை இரண்டு சம பாகங்களாகப் பிரிப்
போம். அவற்றில் ஒரு துண்டை எடுத்து
மீண்டும் இரண்டாகப் பிரிப்போம். அத்
துண்டுகளில் ஒன்றை மறுபடியும்
துண்டுகளாக்குவோம். இவ்வாறு
பிரித்துக்கொண்டே போக
லாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்குப்
பின் அதை மேலும் சிறு பகுதிகளாகப்
பிரிக்க முடியாது என்ற ஒரு நிலை வரும்.
அதுதான் இரும்பின் மிகமிகச்
சிறிய
பகுதி; அதுவே இரும்பு அணு. இவ்வாறே
தங்கத்தின் மிகமிகச் சிறிய பகுதிதான்
தங்க அணு. மற்றத் தனிமங்களுக்கும் அவ்
வாறே மிக நுட்பமான அணுக்கள் உண்டு.
அணு மிகவும் சிறியது. அதைக் கண்ணால்
பார்க்க முடியாது. அதன் உருவத்தைப்
பல்லாயிரம் மடங்கு பெரிதாக்கிக் காட்
டும் மைக்ராஸ்கோப் என்னும் கருவியின்
உதவியால்கூடப் பார்க்க முடியாது. ஒரு
குண்டூசியின் முனையில் மட்டும் கோடிக்
கணக்கான அணுக்கள் இருக்கின்றன
என்றால் அணு எவ்வளவு சிறியது என்பதை
நீங்களே எண்ணிப் பாருங்கள்! ஒரு கட்
டடத்தில் செங்கற்கள் ஆயிரக்கணக்கில்
இருப்பதைப்போல் ஒவ்வொரு பொருளி
லும் பல கோடி அணுக்கள் உள்ளன.
அணுக்களைக் கண்ணால் காணமுடியா
விட்டாலும், அணுக்களால் ஆகிய பொருள்
களின் இயல்புகளிலிருந்து அணுக்களைப்
பற்றி ஓரளவு ஆராய்ந்து கூற
முடியும். அவ்வாறு முதன் முதலில்
ஆராய்ந்து கூறியவர் டால்ட்டன் என்ற
ஆங்கிலேய விஞ்ஞானி. அணுவை அதற்கு
மேலும் சிறு பகுதிகளாகப் பிரிக்க முடியாது
என்று டால்ட்டன்
ஆனால்
கூறினார்.
அவருக்குப் பின் தோன்றிய தாம்சன்,