பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

அணு - அணு சக்தி

10 எலெக்ட்ரான் புரோட்டான் கியூட்ரான் புரோட்டான் அணு எலெக்ட்ரான் ஹைடிரஜன் அணு ஹீலியம் அணு ரூதர்போர்டு, நீல்ஸ் போர் முதலிய விஞ் ஞானிகள் அணுவைப் பற்றி மேலும் புதிய உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள். அவற் றுள் ஒன்று,அணுவையும் பிரிக்க முடியும் என்பதே; மற்றொன்று, மைக்ரோஸ்கோப் பினால்கூடக் காணமுடியாத அவ்வளவு சிறிய அணுவுக்குள்ளும் மேலும் நுண்ணிய பகுதிகள் உள்ளன என்பது! அணுக்களில் அடங்கி உள்ள பகுதிகள் மூன்று வகைப்படும். அவையே எலெக்ட் ரான், புரோட்டான், நியூட்ரான் என்பன. புரோட்டான்களும், எலெக்ட்ரான் களும் மின்சக்தி கொண்டவை. ஆனால் அந்த மின்சக்திகள் ஒன்றுக்கொன்று நேர் மாறானவை. புரோட்டானின் எடையுடன் ஒப்பிடும்பொழுது எலெக்ட்ரானுக்கு எடையே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் புரோட்டானின் எடையே மிகமிகக் குறைவு. எலெக்ட்ரானின் எடை புரோட்டானின் எடையில் 1,840-ல் ஒரு பங்குதான் உண்டு. நியூட்ரான் புரோட் டானுக்குச் சமமான எடை உள்ளது. ஆனால் அதற்கு மின்சக்தி கிடையாது. புரோட்டான்களும், நியூட்ரான்களும் அணுவின் நடுவில் அமைந்துள்ளன. அப் பகுதிக்கு உட்கரு என்று பெயர். பூமியும் மற்றக் கோள்களும் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருப்பதைப்போல் எலெக்ட்ரான் கள் உட்கருவை மிகமிக வேகமாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஹைடிரஜன் அணுவில் ஒரு புரோட் டானும், ஒரு எலெக்ட்ரானும் உள்ளன; நியூட்ரான் இல்லை. மற்ற எல்லாத் தனி மங்களின் அணுக்களிலும் புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் ஆகிய மூன்றும் உண்டு. ஆனால் ஒரு தனிமத்தின் அணுவில் உள்ள புரோட்டான் அல்லது எலெக்ட் ரான்களின் எண்ணிக்கை இன்னொரு தனி மத்தின் புரோட்டான் அல்லது எலெக்ட் ரான்களின் எண்ணிக்கையிலிருந்து வேறு படும். அணு சக்தி சில தனிமங்களின் அணுக்கள் தாமா கவே சிதைகின்றன. அப்பொழுது அவற் றின் அணுக்களில் இருந்து சில புரோட் டான்களும், எலெக்ட்ரான்களும் வெளி யேறுகின்றன. அதற்குக் 'கதிரியக்கம்' கதிரியக்கம் ஏற்படும் ஏராளமான சக்தி வெளியா கிறது. அதற்கு அணுசக்தி என்று பெயர். பார்க்க : அணுசக்தி; மின்சாரம்; மின் கலங்கள். என்று பொழுது பெயர். அணு சக்தி : எந்த வேலையைச் செய் வதற்கும் சக்தி வேண்டும். மேசைமீது உள்ள புத்தகத்தை எடுக்க வேண்டுமா? நீர் நிரம்பிய வாளியைக் கிணற்றுக்குள் ளிருந்து மேலே இழுக்க வேண்டுமா? எல் லாவற்றிற்கும் சக்தி வேண்டும். நம் உடம் பின் ஒவ்வொரு அசைவிலும் சக்தி செல வழிகிறது. வெப்பம் ஒரு சக்தி. அதைக் கொண்டு நீராவி உற்பத்தி செய்து ரெயில்களை ஓட் டலாம்; எந்திரங்களை இயக்கலாம்; மின் சாரம் உற்பத்தி செய்யலாம். மின்சாரமும் ஒருவகை சக்தியே. எத் தனையோ வகையான வேலைகளைச் செய் வதற்கு மின்சாரம் பயன்படுகிறது. அதனால் எந்திரங்களை இயக்கலாம்; மின்சார அடுப் பில் சமையல் செய்யலாம்; மின்சார விளக் குகள் இப்பொழுது எங்கும் காணப் படுகின்றன. வெப்பம், மின்சாரம் இவற்றைப் போல் அணு சக்தியும் ஒருவகை சக்தியே. அணுக்களிலிருந்து கிடைப்பதால் இதற்கு அணு சக்தி என்று பெயர். இதில் வெப்ப மும், ஒளியும் கலந்திருக்கும். மற்ற எல்லாவகை சக்திகளையும்விட அணு சக்திதான் மிக்க ஆற்றல் வாய்ந்தது. இதைக்கொண்டு நல்லதையும் செய்யலாம், அழிப்பதற்கும் இதைப் பயன் படுத்தலாம். அணுசக்தியின் கொடுமையான அழிக்கும் திறன் இரண்டாம் உலக யுத்தத் தில்தான் வெளிப்பட்டது. ஜப்பான்மீது அமெரிக்கர்கள் வீசிய இரு அணு குண்டு கள் ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரு பெரிய நகரங்களை அடியோடு அழித்துவிட் டன; அந்த அழிவு வேலையோடு அவற்றின் கொடுமை நின்றுவிடவில்லை. அந்த நகரங் களிலும், சுற்றுப்புறங்களிலும் பிறக்கும் குழந்தைகளையும் அந்த அணுகுண்டி லிருந்து வெளிப்பட்ட கதிர்கள் நோய் நொடிகளுக்கு உள்ளாக்கிவிட்டன.