பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு சக்தி

11


அணுசக்தியிலிருந்து கிடைக்கும் வெப்பத்தை அளவிட முடியாது; அவ் வளவு அதிகம். அந்த வெப்பத்தைப் பயன் படுத்தி நீராவி உண்டாக்கலாம். நீராவி யைக் கொண்டு எந்திரங்களை இயக்கலாம்; மின்சாரம் உற்பத்தி செய்யலாம். எனவே அணு சக்தியைப் பயன்படுத்தினால் நிலக் கரியையும், பெட்ரோலையும் வேறு தொழில் களுக்குப் பயன்படுத்த முடியும். சக்தியை ஆக்கவேலைக்குப் பயன்படுத்தும் முயற்சிகள் ஓரளவு இப்பொழுதே வெற்றி கண்டு வருகின்றன. 1954-ல் அமெரிக்கா அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றைக் கட்டி முடித்தது. 1957-ல் சோவியத் யூனியன் அணு சக்தியால் இயங் கும் கப்பல் ஒன்றைக் கட்டியது. அணு அணுக்களிலிருந்து அணு சக்தி வெளி யாகும்பொழுது வெப்பம், ஒளி இவை தவிர கண்ணுக்குத் தெரியாத வேறு சில வகைக் கதிர்களும் வெளியாகின்றன. இக் கதிர்கள் உடம்பின்மீது பட்டால் ஆபத்து விளையும். ஆகையால் இக் கதிர்களை வெளி யில் பரவவிடக் கூடாது. ஆனால் தக்க முறையில் கட்டுப்படுத்தி இவற்றைக் கொண்டு சில நோய்களைத் தீர்க்கலாம். எனவே மருத்துவத்திலும் அணு சக்தி பயன்படுகின்றது. இவையன்றிப் பயிர் வளர்ச்சிக்கும் அணு சக்தியைப் படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்கிக் பயன் கொள்ளலாம். இந்த அணு சக்தி கண்ணுக்குத் தெரி அணுசக்தி நிலையம் யாத மிகமிகச் சிறிய அணுவிலிருந்து எவ் வாறு கிடைக்கிறது தெரியுமா? அணு என்ற கட்டுரையில் அணுவின் உள் அமைப்பைப் பற்றிக் கூறினோம். எல்லா அணுக்களிலும் புரோட்டான் களும், எலெக்ட்ரான்களும் இருக்கின்றன என்னும் உண்மை எல்லாத் தனிமங்களுக் கும் பொருந்தும். ஆனால் ஒவ்வொரு தனி மத்தின் அணுவில் உள்ள புரோட்டான் களின் அல்லது எலெக்ட்ரான்களின் எண் ணிக்கை இன்னொரு தனிமத்தின் புரோட் டான்களின் அல்லது எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையிலிருந்து வேறுபடும். உதாரணமாக ஹைடிரஜன் அணுவில் ஒரு புரோட்டானும், ஒரு எலெக்ட்ரானும் உள்ளன. யுரேனியம் அணுவில் விவசாயம் புரோட்டான்களும், 92 எலெக்ட்ரான் களும் உள்ளன. இவ்வாறு அதிகப் புரோட் டான்கள் உள்ள சில தனிமங்களின் அணுக் களிலிருந்து சில புரோட்டான்களும், எலெக்ட்ரான்களும் எளிதில் வெளியேறு கின்றன. அப்பொழுது ஏராளமான வெப் பமும், ஒளியும், சிலவகைக் கதிர்களும் உண்டாகின்றன. யுரேனியம் ஆகிய இரு ரேடியம், தனிமங்களும் தாமாகவே அணு சக்தியை வெளிவிடுகின்றன. வேறு சில தனிமங்களி லிருந்து செயற்கை முறையிலும் அணு சக்தியைப் பெறலாம். புளூட்டோனியம், ஹைடிரஜன் ஆகியவை அணுசக்தி உற்பத்திக்குப் பயன்படும் வேறு சில தனிமங்கள் ஆகும். அணுசக்தியின் பயன்கள் சில 11 ஊர்திகள் 92 மருத்துவம்