பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டங்களும் விளையாட்டுகளும் - ஆடி

41


ஆட்டங்களும் விளையாட்டுகளும் : விளையாட்டு என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அல்லவா? நீங்கள் மட்டுமல்ல; பெரியவர்களும் விளையாட்டை மிகவும் விரும்புவார்கள். வேலை செய்து ஓய்ந்த போது உடம்புக்கும் உள்ளத்துக்கும் புதிய உணர்ச்சியைக் கொடுக்க ஏதேனும் ஒரு விளையாட்டு வேண்டியிருக்கிறது. அதனால் மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழு வதிலும் மக்கள் பல ஆட்டங்களிலும் விளை யாட்டுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார் கள். திருவிழாக் காலங்களில் கரகம் ஆடு வதையும், காவடி ஆடுவதையும், பொய்க் கால் குதிரை ஆடுவதையும் நீங்கள் பார்த் திருப்பீர்கள். இந்த ஆட்டங்கள் எல்லாருக் கும் மகிழ்ச்சியைத் தருகின்றன. விளையாட்டுகளில் இருவகையுண்டு. ஒன்று வீட்டுக்குள் இருந்தே விளையாடு வது. மற்றொன்று வீட்டுக்கு வெளியில் விளையாடுவது. சதுரங்கம், தாயக் கட்டம், புலிக்கோடு, கேரம் போன்றவை முதல் வகை. பந்தாட்டங்கள், பச்சைக் குதிரை, கயிறு இழுத்தல், ஓட்டம், சடுகுடு, சிலம் பம் போன்றவை இரண்டாம் வகை. தாட்டங்களில் சிறப்பானவை கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட், கூடைப்பந்து, வாலிப் பந்து, டென்னிஸ், பாட்மின்டன் ஆகிய விளையாட்டுகள். பந் பெண்களுக்கு எனத் தனி விளையாட்டு களும் உண்டு. பல்லாங்குழி, கும்மி, 41 கோலாட்டம், கழங்கு ஆடுதல், 'ஸ்கிப் பிங்' கயிறு ஆடுதல் முதலியவை பெண்கள் விரும்பிப் பயிலும் விளையாட்டுகள். பந் தாட்டங்களில் பாட்மின்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளைப் பெண்களும் விளையாடுவார்கள். விளையாட்டிலும் ஓர் ஒழுங்குமுறை வேண்டாமா? அதற்காக ஒவ்வொரு விளை யாட்டிற்கும் தனித்தனியே விதிகள் உண்டு. விளையாட்டுப் பந்தயங்களில் போட்டியிடுவதால் குழந்தைகளுக்கும் மற் றவர்களுக்கும் ஊக்கம் பிறக்கின்றது. சில விளையாட்டுகளில் பலர் சேர்ந்து விளையாடித்தான் வெற்றிபெற முடியும். இதனால் கூடிச் செயல்புரியும் உணர்ச்சி வளர்கிறது. பெரிய விளையாட்டுப் போட்டிகளில் பல நாட்டு மக்களும் கலந்து கொள்ளுவார்கள். இதனால் நாடுகளிடையே நட்பும் உறவும் வளர் கின்றன. ஆடி: முகம் பார்க்கும் கண்ணாடி யின் முன் எந்தப் பொருளை வைத்தாலும் அதன் உருவம் கண்ணாடியில் தெரிகிறதல் லவா? கண்ணாடியில் தெரிவது பொருளின் பிம்பமாகும். பொருளிலிருந்து செல்லும் ஒளிக்கதிர்கள் கண்ணாடியின் பரப்பில் பட் டுத் திரும்புகின்றன. இதற்குப் பிரதி பலிப்பு என்று பெயர். ஒளியைப் பிரதி பலித்துப் பிம்பங்களை உண்டாக்கும் பரப் புக்கு ஆடி என்று பெயர். முகம் பார்க் கும் கண்ணாடியும் ஓர் ஆடிதான்.