பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடி - ஆடு

42



சில கட்டடங்களில் சன்னல்களுக்குக் கண்ணாடியைப் பொருத்தியிருப்பார்கள். அந்தக் கண்ணாடிக்கு முன் நின்றால் நம் உருவம் தெரியாது. ஏனெனில், அது ஓர் ஆடியல்ல. அது ஒளியைப் பிரதிபலிப்ப தில்லை; ஒளி அதை ஊடுருவிச் சென்று விடுகிறது. ஆனால் அதே கண்ணாடியின் ஒரு பக்கத் தில் பாதரசத்தைப் பூசினால் அது ஒளியைப் பிரதிபலிக்கும். அப்போது அதுவும் ஓர் ஆடி ஆகும். பாதரசத்திற்குப் பதில் வெள்ளி கலந்த ஒரு பூச்சையும் பூசுவார் கள். அது அழியாமல் இருக்க அதன்மேல் அரக்கு எண்ணெயில் குழைத்த செந்தூரத் தைத் தடவுவார்கள். ஆடிகளில் பலவகை உண்டு. முகம் பார்க் கும் கண்ணாடியின் மேற்பரப்பு சமதளமாக இருக்கும். இவ்வகை ஆடிக்குச் சமதள ஆடி என்று பெயர். பொருளின் அளவும், ஆடியில் தெரியும் அதன் பிம்பத்தின் அளவும் சமமாக இருக்கும். ஆனால் பொருளின் இடப்புறம் பிம்பத்தின் வலப் புறமாகவும், பொருளின் வலப்புறம் பிம் பத்தின் இடப்புறமாகவும் மாறித் தெரி யும். இதை 'இட வல மாற்றம்' என்பர். கண்ணாடியின் முன் அமர்ந்து வலது கையால் எழுதுங்கள். கண்ணாடியில் உங்கள் பிம்பம் தன் இடது கையால் எழுதும்! ஆடிகளில் கோள ஆடி என்று ஒன்று உண்டு. இது இருவகைப்படும். ஒன்று குவி ஆடி; மற்றொன்று குழி ஆடி. மோட்டார் வண்டிகளில் மோட்டார் ஓட்டியின் எதிரில் உள்ள ஒரு சிறிய வட்டமான ஆடியைப் பார்த்திருப்பீர்கள். மோட்டாருக்குப் பின் னால் உள்ள சாலை, கட்டடங்கள், மற்ற மோட்டார் வண்டிகள் முதலியவற்றின் பிம்பங்கள் எல்லாமே அந்தச் சிறிய ஆடி யில் தெரியும். ஆனால் அந்தப் பிம்பங்கள் அப்பொருள்களைவிட மிகமிகச் சிறியவை யாக இருக்கும். பொருள்களின் பிம்பங் களைச் சுருக்கிக் காட்டும் இந்த ஆடிக்குக் குவி ஆடி என்று பெயர். ஏனென்றால் இது சமதளமாக இராமல் இதன் வெளிப்புறம் குவிந்திருக்கும். மற்றொரு வகை ஆடி குழிவாக இருக் கும். இதன் முன் எந்தப் பொருளை வைத் தாலும் அதன் பிம்பம் அப்பொருளை விடப் பல மடங்கு பெரிதாகத் தோன் றும். டெலிஸ்கோப்பு (த.க.) போன்ற கருவிகளில் குழி ஆடிகள் பயன்படுகின் றன. கண்ணாடியைச் செய்வதற்கு முன்பே ஆடிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. மெருகிட்ட உலோகத் தட்டுகளே ஆடி களாக இருந்தன. இக்காலத்திலுங்கூட மிக நுட்பமான விஞ்ஞான சோதனைகளுக் குப் பளபளப்பான வெள்ளித் தகடுகளைப் பயன்படுத்துகிறார்கள். மைக்ராஸ்கோப்பு (த.க.), டெலிஸ் கோப்பு, பெரிஸ்கோப்பு (த.க.), பல கோலங்காட்டி (த.க.) போன்ற பல கருவி களில் ஆடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆடிசி: உங்கள் எல்லாருக்கும் இரா மாயணமும், மகாபாரதமும் தெரிந்திருக் கும். கிரீஸ் நாட்டிலும் இரண்டு பெரிய காப்பியங்கள் உண்டு. அவை இலியடு, ஆடிசி என்பன. ஆடிசியஸ் என்ற கிரேக்க வீரன் ஒருவனைப் பற்றிய கதைதான் ஆடிசி. ஆடிசியஸ் டிராய் என்ற நகரி லிருந்து புறப்பட்டுத் தன் தோழர்களுடன் கடல் வழியாகத் தன் தாய்நாடான இத் தக்காவுக்குத் திரும்பி வந்து தன் மனைவி யைச் சேர்ந்த கதையை ஆடிசி கூறுகின் வழியில் ஆடிசியஸுக்கு நேர்ந்த இடையூறுகள், துன்பங்கள், அவன் காட் டிய வீரம், அடைந்த மாபெரும் வெற்றி கள் இவை இதில் விளக்கப்படுகின்றன. இது செய்யுள் நடையில் உள்ளது. இதை ஹோமர் என்ற புகழ்பெற்ற கிரேக்கக் கவிஞர் இயற்றியதாகக் கூறுகின்றார்கள். இந்நூலைப் படித்துப் பழங்கால கிரேக்க மக்களின் நாகரிகம், பண்பாடு, நடை முறைகள் இவற்றைப் பற்றி யெல்லாம் நாம் தெரிந்து கொள்ளலாம். றது. கள் ஆடு: நாம் நாள்தோறும் ஆடுகளைப் பார்க்கிறோம். உலகம் முழுவதிலும் மக் ஆடுகளை விரும்பி வளர்க்கின்றார் கள். ஆடுகளில் வெள்ளாடு, பள்ளாடு, செம்மறியாடு, குறும்பாடு எனப் பலவகை யுண்டு. மலை, காடு, ஊர்ப் புறங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் ஆடு வாழ்கிறது. மாட்டுக் குளம்பைப் போலவே ஆட்டின் குளம்பும் பிளவுண்டு இருக்கும். இதனால் சரிவான மிகப்பெரிய பாறைகளின் மேலும் ஆடுகள் தாவி ஏறும். மாடு, மான் இவற் றைப் போலவே ஆடுகளும் அசை போடு கின்றன. இவை தழைகளையும் புல்லையும் தின்னும். வெள்ளாடுகள் வெள்ளையாகவும், கறுப் பாகவும், பழுப்பு நிறமாகவும் இருக்கும். சிலவற்றுக்குத் தாடியுண்டு. வெள்ளாட் டுப் பால் நல்ல சத்து நிறைந்தது. செம்மறியாடுகளில் சுமார் 200 வகை உண்டு. சிலவகை ஆடுகளின் கொம்புகள் சுருண்டு இருக்கும். செம்மறியாடுகளின் உடலில் உரோமம் அடர்ந்து நீண்டு வளர் கின்றது. இந்த உரோமத்தைக் கொண்டு துணிகள், கம்பளங்கள் முதலியவற்றை நெய்கிறார்கள். காச்மீரத்தில் ஒருவகை ஆட்டு உரோமத்திலிருந்து நேர்த்தியான சால்வைகள் நெய்யப்படுகின்றன. இவை உலகப் புகழ்பெற்றவை.