பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சடித்தல்

3


மானே அச்சு எந்திரத்துடன் இணைந்த வார்ப்படர் பெட்டி மானோ அச்சு எந்திரம் அதே காசின்மேல் ஒரு பக்கத்தில் இலே சாக மையைப் பூகவோம். அந்தப் பக் கத்தை வெள்ளைக் காகிதத்தின்மேல் வைத் துக் காசை அழுத்தினால் காசின் உருவம் அப்படியே விழுகிறது. அச்சுக்கலை முதன் முதல் உண்டானது இப்படித்தான், இந்தியாவில் முதன் முதலில் 16ஆம் நூற்றாண்டில்தான் அச்செழுத்து செய்யப் பட்டது. அப்போது எழுத்துக்களை ஒரு மரப்பலகையில் வரி வரியாகச் செதுக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு எழுத்தை யும் தனித்தனியாகச் செதுக்கினார்கள், பிறகு அந்த எழுத்துக்களைச் சொற் களாகக் கோத்து அச்சடிக்கத் தொடங் கினார்கள்.

மர எழுத்துக்கள் விரைவில் தேய்ந்து போயின. அதனால் உலோகங்களைக் கொண்டு அச்செழுத்துக்கள் தார்கள். நாளடைவில் அச்செழுத்துக்கள் செய்வதற்கும், விரைவாக அச்சடிப்பதற் கும் எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஈயத்துடன் வேறு உலோகங்களையும் கலந்து எழுத்துக்களைச் செய்கின்றார்கள். ஒவ்வொரு எழுத்தும் தனித்தனியாக வார்க்கப்படுகிறது. அச்செழுத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்துவைப்பதற்கு ஒரு பெரிய தட்டு உண்டு. அதில் பல சிறிய அறைகள் இருக்கும். எழுத்துக்களை அறைகளில் வைத்திருப்பார்கள். அச்சுக்கோப் பவர் தேவையான எழுத்துக்களைப் பொறுக்கித் தம் கையில் உள்ள கோப்புச் சட்டத்தில் வரி வரியாக அடுக்கு வார். இதற்கு அச்சுக்கோத்தல் என்று பெயர். கோப்புச் சட்டத்தில் சில வரிகள் சேர்ந்தவுடன் அவற்றை ஒரு பெரிய தட் டிற்கு மாற்றுவார். இந்தத் தட்டு நிரம் பியவுடன் அதன்மீது மையைத் தடவி மேலே ஒரு காகிதத்தை வைத்து அழுத்து வார். அப்போது அதன் பிரதி கிடைக்கும். இதில் காணும் பிழைகள் திருத்தப்படும். இவ்வாறு சாதாரணமாக எட்டுப் பக்கங்களைக் கோத்து ஓர் இரும்புச் சட்டத்தில் பொருத்துவார்கள். இச் சட்டத்தை அச்சு எந்திரத்தில் முடுக்கித் தேவையான பிரதிகளை எடுத்துக்கொள் வார்கள்.
ஒவ்வொரு எழுத்தாகப் பொறுக்கிக் கோக்கும் முறை பல பக்கங்களை அச் சடிக்க வேண்டிய செய்தித்தாள் நிலையங் களுக்குப் பயன்படாது. எனவே, விரைவாக அச்சுக் கோப்பதற்கு நுட்ப மான எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன. அவை லைனோ அச்சு எந்திரம், மானோ அச்சு எந்திரம் என இரு வகைப்படும். லைனே கூன அச்சு எந்திரத்தில் உள்ள ஒவ்வொரு பித்தானும் ஒரு எழுத் தைக் குறிக்கும். அச்சுக் கோப்பவர்