உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சேரர்

உள்ள ஐந் நூறு ஊர்களைப் பிரமதாயமாகக் கொடுத்த தோடு, தென்னுட்டினின்றும் வரும் வருவாயில் ஒரு பாகத்தை முப்பத்தெட்டு யாண்டுவரை பெற்றுக்கொள்ளும் உரிமையும் கொடுத்துச் சிறப்பித்தான்். இவ்வாறு புலவர்ப் போற்றும் புகழ்நிறை வாழ்வினயை இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் ஐம்பத்தெட்டியாண்டு வீறெய்தி வ்ாழ்ந்தான்்

என்ப.

இனி, திருப்போர்ப்புறம் எனும் இடத்தே, சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியொடு போரிட்டு, அவளுேடு ஒருங்கே உயிரிழந்த சோமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்பானுெரு சேரவேந்தன், புற.நா அனு ற்றில் கூறப்பட்டுள்ளான். அவர் இருவரும் இறந்து கிடந்த காட்சியைக் கண்டு, கண்ணிர்விட்டுக் கலங்கியுள்ள னர் பரணரும், கழாத்தலையாரும் (புறம்: சுஉ. சுகட, கூகக). இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குறிக்க வழங்கும் பெயர்களுள், ' குடக்கோ நெடுஞ்சேரலாதன் ” எனபதும் ஒன்று எனப் பதிற்றுப்பத்தின் ஆரும் பத்துப்பதிகம் கூறுகிறது. ஆதலாலும், சோழன் வேற்பஃறடக்கைப் பெரு விறற்கிள்ளியொடு பொருது வீழ்ந்தான்் பெயரும் * குடக்கோ நெடுஞ்சேரலாதன் ” என்றே கூறப்பட் டுள்ளது ; ஆதலாலும், குடக்கோ நெடுஞ்சேரலாதனும், வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் இறந்து வீழ்ந்தது கண்டு இரங்கிப் பாடிய புலவர்களுள் ஒருவராய பரணர், ‘ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்று முதிர் வடவரை வணங்குவிற் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் ’ (அகம் : கூகசு) என இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும் பாடியுள்ளார் ஆதலாலும், வேற் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியொடு போரிட்டு உயிர் துறந்தான்் இமயவரம்பன் நெடுஞ்சோலா கனே எனக் கோடல் பொருந்தும்.