பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சேரர்

நிலைமாறி அழிவதுபோலும் அழிவுவர்துற்ற கிாலத்தும, அவ்வழிவினை அகற்றுதற் பொருட்டு, முன்னர்க் கூறிய தொன்றைப் பின்னர் மறுத்து, அவ்வாறு கூறினேனல் லேன் எனப் பொய்கூறி மறுக்கும் மாண்பிலான் அல்லன் செல்வக் கடுங்கோ.

' பார்ப்பார்க் கல்லது பணிபு அறியலேயே ;

பணியா உள்ளமொடு அணிவரக் கெழீஇ கட்டோர்க் கல்லது கண்ணஞ் சலேயே :

கிலம் திறம் பெயரும் காலே யாயினும் கிளந்த சொல்ரீ பொய்ப்பு அறியலேயே.”

(பதிற்று : சுக.) செல்வக் கடுங்கோ சிறந்த கொடையாளனுவன் ; கொடுக்கிலாதான்ப் பாரியே என்று கூறினும் கொடுப்பா ரிலை” எனச் சுந்தால், கொடையிற் சிறந்தோணுகப் பாராட்டப்பெறும் பாரியின் பெரு நண்பராய கபில்ரே, செல்வக் கடுங்கோ, அந்தணர்க்கு அருங்கலங்களை அளிக் குங்கால், அப் பொருளோடு வார்த்த நீர் ஒடியே அவன் அரண்மனை முற்றம் சேறுபடும்; கன்னப் பாடிவரும் பாணர் முதலியோர்க்குப் பகையரசர் கிறையாகத்தந்த யானேகளை அளிப்பதோடு, அளக்கும் மாக்காவின் வாயும் தேய்த்துபோகுமாறு கிறைய அளந்த நெற்குவியல் ப்ல ‘வற்றையும் அளிப்பன் ; வக்கோர்க்கு எல்லாம் வழங்கும் வள்ளலாய செல்வக் கடுங்கோ, வாரி வாரி வழங்கிவிட் டோமே என வருந்தான்் ; பொருள் கொடுக்கக் கொடுக்கப் புகழ் பெருகுவது சுண்டு, மகிழ்ந்து மனச்செருக்கு அடையா மாண்பினன் ; வழங்கவழங்க அவன் வள்ளன்மை வளர்ந்தே தோன்றும்; தன் புகழ் பாடிவரும் கூத்தர் முதலியோர்க்கு, தன் ஏவலரை விளித்து, அவர்க்குக் குதிரைகளையும், தேர்களையும், அணி பல அணிவித்து அளித்து அனுப்புக என ஆணையிடும் அருள் உள்ளம் உடையவன் எனப் பலப்பல கூறிப் பாராட்டுவாராயின், அவன் கொடைப்பெருமையினேக் கூறவும் ஒண்னுமோ !