பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சேரர்

தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என வேறுபடு நனந்தலைப் பெயரக் கூறினை பெரும! நின் படிமை யானே. (பதிற்று: எச)

பெருஞ்சோல் இரும்பொறை, இவ்வாறு அறிவாலும், கொடையாலும் சிறந்து விளங்குவதைக் கண்ட புலவர் அரிசில்கிழார், உலகில், அறிவுடையாரையும், கொடைத் தொழிலில், இவர்க்கு இது கொடுக்கலாம், இவர்க்கு இது கொடுத்தலாகாது என எண்ணிப்பார்க்கும் அறிவின்றி, எவர்க்கும், எதையும் கொடுக்கும் அறிவுமடம்பட்ட கொடைத்தொழில் உடையாரையும் நோக்கிய வழி, அத் தகையார்க்கு உவமையாகப் பெருஞ்சோல் இரும் பொறையை எடுத்துக்காட்டிக் கூறலாமேயன்றி, இவனுக்கு நிகராகக் கூறவல்லார் உலகில் ஒருவரும் இலர் எனக் கூறி, அவன் அறிவும், கொடையும் ஒருங்கே தோன்றப் பாடிப் புகழ்ந்துள்ளார் :

'உாவோர் எண்ணினும், மடவோர் எண்ணினும்

பிறர்க்கு வோயி னல்லது, கினக்குப் பிறர்உவமம் ஆகா ஒருபெரு வேந்தே ’ (பதிற்று: எக.)

பெருஞ்சோல் இரும்பொறைபால் யாம் கண்ட பண்புகள் அனைத்தினும், அவன் புலவர்மாட்டுக் கொண் டுள்ள பேரன்பும், பெருமதிப்பும் பல்லாற்ருனும் பாராட் டற்குரியனவாம். பாக்கள் பல புனேந்து கன் புகழ் பாடிய புலவர் அரிசில்கிழாரின் அறிவுகலம் கண்டு வியந்த பெருஞ்சேரல் இரும்பொறை, அவர்க்கு ஒன்பது நாருயிரம் காணம் கல்கியதோடு அமையாது, அாசமாதேவியா ரோடும், அரண்மனை விட்டு வெளியேறி சின்று, புலவரை அழைத்து, இவ்வரண்மனேயும், ஆட்சிப் பொறுப்பும் இனி, கின்னுடைமையாம் ஏற்றருளக ’ என வேண்டி கின்ருன்; அரசன் அன்புள்ளத்தை அறிந்த புலவர் பெருங் தகையாரும் அவன் விரும்பியாங்கே, அவற்றை ஏற்றுக் கொண்டு அடுத்த கணமே, அரசே! என் உடைமை யாகிய இவ்வாட்சியினே கினக்கு யான் அளிக்கின்றேன்;

ஏற்றருள் க” என வேண்டியளித்து அமைச்சுப்பூண்டு