பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 83

அகமகிழ்த்ார்; அரசனும், புலவனும் வளர்த்த அன்புத் தொடர்பின் சிறப்பே சிறப்பு! -

தகர்ே எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் காலத்தே, மோசிாேனுர் எனும் பெயருடைப் புலவர் ஒருவர் இருக்கார் ; பெருஞ்சேரல் இரும் பொறை அ ரி சி ல் கி ழ லும் பாராட்டப்பெறும் பெரும் பேறுடையான் என்பதறிந்த புலவர், அவன் அரசவை நோக்கிச் சென்றார் ; அவர் சென்றபோது, அரசன் ஆண்டு இலன்; அவனேக் காணுத புலவர், அவ்வரண் மனயினைச் சுற்றி வருவாராயினர் ; ஆங்கு, அழகிய கட்டில் ஒன்று, ஒருபால் இருக்கக் கண்டார்; அது, அரச னின் வெற்றிமுரசு வைத்தற்குரிய கட்டிலாம் ; முரசு நீராடி வருவதற்குக் கொண்டுசெல்லப் பட்டுள்ளமையால், அக்கட்டில் வறிதே கிடந்தது ; அவ்வழகிய கட்டிலேயும், அதன் மீது விரிக்கப்பெற்றிருக்கும் மெல்லிய மலர்களால் ஆகிய படுக்கையினையும் கண்டார் புலவர். அவர்க்கு, அது முரசுகட்டில் என்பது தெரியாது ; மேலும், வழிநடை வருத்தமும் உடையாவர் ; அகனுல், அதன்மீது கிடக்க நன்கு உறங்கிவிட்டார் ; சிறிது நேரத்தில் ஆண்டு வந்த பெருஞ்சோல் இரும்பொறை, தன் முரசுகட்டில் மீது யாரோ ஒருவர் படுத்துறங்கக் கண்டான்; முரசு, அரசனின் வேறன்று; முரசிற்குச் செய்யும் சிறப்பு, அரசர்க்குச் செய்யும் சிறப்பு ; அதற்கு உண்டாம்பழி, அரசற்கு உண்டாம்பழி என்பது பழங்காலப் பண்பு ; ஆதலின், முரசுகட்டிலில் பசித்து உறங்குவது, அரசகட்டிலில் படுத்த உறங்குவதுபோலும் பெருங்குற்றமாம் ; அக் குற்றம் புரிந்தார்க்குக் கொலையே தண்டமாம்; ஆயினும், தன் முரசுகட்டிலில் படுத்து உறங்குவார், ஒரு பெரும் புலவராவர் என்பதை அரசன் அறிவான்; புலவர், காடா ளும் தன்னிலும் உயர்ந்தவராவர் என்பதை உணர்வான் அவன் ; ஆதலின், அவர் ஆண்டு உறங்குவதால் குற்றம் இன்று என எண்ணினுன் ; ஆகவே, பிறர் யாரேனும் படுத்து உறங்கக் காணின், வாளெடுத்துத் தலை வாங்க