பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கபிலர் கடவுள் வாழ்த்துச் செய்யுளாக வரும் முதற் செய்யுள், 'தினையளவு போதா” எனத் தொடங்கும் திருவள்ளுவ மாலைச் செய்யுள், நெட்டிலை யிருப்பை” எனத் தொடங் கும் தனிச் செய்யுள். பாட்டியல் சங்ககாலப் புலவர்கள் அறியாதது. மூத்த நாயனர் என்பது விநாயகரைக் குறிப்பது ; விநாயகர் வணக்கம் கி. பி. ஏழாம் நாற்ருண்டிற்குப் பிறகே தமிழகத்தில் இடம்ப்ெற்றது என்பர் , பி. 642-ல், சாளுக்கியர் தலைநகர் வாதாவியை அழித்து வெற்றி கொண்ட பல்லவ நரசிம்மவர்மனின் படைத்தலைவர், சிறுத் கொண்டர் என அழைக்கப்பெறும் பரஞ்சோதியார், அல் வாதாவியினின்றும் கவர்ந்துவந்த பொருள்களுள் விநாயக ரும் ஒன்று ; அதுவே வாதாபி விநாயகர் என்று. அழைக் கப்படும்; அதுவே தமிழகத்தில் வழங்கப்பெற்ற முதல் விநாயகர் வடிவம் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர் ; அதற் கேற்ப, வைதீகக் கடவுளர் பலரையும் குறிப்பிடும் சங்க நூல்களில், விநாயகர் பற்றிய குறிப்பே காணப்படவில்லை. ஆகவே, கி. பி. இரண்டாம் நூற்ருண்டைச் சேர்ந்த சங்க காலப் புலவராகிய கபிலர், விநாயகரைப் பாராட்டிப் பாடி ஞர் எனல் பொருக்தாது. மேலும் இரட்டைமணிமாலை போன்ற பிரபந்தங்கள் சங்ககாலத்தில், தமிழ்மொழி வர் லாற்றில் இடம்பெறவில்லை. ஆகவே, மூத்காயனர் இரட்டைமணிமாலை கபிலர் பாடியது அன்று. பதினென் ரும் திருமுறையைச் சார்ந்த ஏனைய இரு நூல்களும், அவை கூறும் பொருள், அவை அமைந்திருக்கும் முறை, அதன் கண் வந்துள்ள வடசொற்கள் இவற்றைக்கொண்டு நோக்கின், அவை, கபிலரால் இயற்றப்பட்டன அல்ல என்பது புலனும் ; பின்னல் வந்த, கபிலதேவ ராயனர் என்ற சைவர் ஒருவர், செய்த இந் நூல்களைப் பெயர் ஒற்றுமை கருதி, கபிலர் பர்டினர் எனப் பிற்காலத்தார் கூறிவிட்டனர். -- " கபிலரகவல்' கபிலர் இயற்றிய நாலன்று என்று முன் அவர்ைப் பற்றிய கதைகளைப்பற்றிக் கூறிய இட்த்தி