பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் இயற்றியன எனப்படும் நூல்கள் 117 லேயே கூறப்பட்டுள்ளது. திருவள்ளுவ மாலையில் வங் துள்ள செய்யுள்கள் எல்லாம் திருவள்ளுவர், அவர் திருக் குறள் இவற்றிடத்தில் பெருமையும், மதிப்பும் கொண்ட ஒருவரோ, பலரோ அவர்களைப் பாராட்டிப் பாடிய பாடல் களே, அவை தாம் பாடியன எனப் பிறர் அறிந்தால் அவற்றை மதியார் என மனத்திடைக் கொண்டு, சங்க காலப் புலவர்கள் பெயர்களோடு இணைக்கப்பட்டுவிட்டன என்றே அறிஞர் கருதுவர்; அத்தகைய பாடலுள் ஒன்றே, தினேயளவு போதா” என்ற இப் பாட்டும் ; ஆகவே, இதுவும் கபிலர் பாட்டன்று ; இன்னு நாற்பதில் வரும் கடவுள் வாழ்த்துச் செய்யுள், விநாயகரை வாழ்த்து கிறது ; ஆகவே, மூத்த நாயனர் இரட்டைமணிமாலைக்குக் கூறிய காரணமே இதற்குக் கூறி, இதுவும் கபிலர் பாடிய பாட்டன்று என்று கொள்வதே பொருந்தும். தமிழ் நாவலர் சரிதை, கபிலர் பிறந்தபோது, பிரிந்துசெல்ல மன மின்றி வாடும் தாய்க்குத் தேறுதல் கூறிப் பாடிய பாட்டு நெட்டிலே இருப்பை” என்ற செய்யுள் என்கிறது ; அப் போது அவர் பாடிய பாட்டு கண்ணுழையா” எனத் தொடங்கும் பாட்டே என்று கூறுகின்றன தனிப் பாடல் திரட்டும், திருவள்ளுவர் சரிதையும் ; கபிலர், தனக்குத் தமிழ் அறிவுறுத்திய ஆசிரியரோடு உலாவச் சென்றபோது அவர் கட்டளைப்படி பாடிய பாட்டு கெட்டிலே இருப்பை” என்று கூறுவாரும் உளர்; இத்தகைய முரண்பாடுகள் உள ஆதலாலும், பொதுவாகவே, தனிப்பாடல் திரட்டின் கண் வருவனவோ, தமிழ்நாவலர் சரிதைக்கண் கள்ணப் படுவனவோ உண்மையான பாடல்கள் அன்றென்பதே ஆராய்ச்சியாளர் கருத்து. ஆகவே, 'நெட்டிலை இருப்பை” என்ற செய்யுளோ, கண்ணுழையா ’ என்ற செய்யுளோ கபிலர் பாடிய செய்யுளன்று என்றே கொள்க. 冷*