பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுநல்வாடை - o 101

நெருப்பு : எனக் காலங்களின் தட்ப வெப்ப நிலைக்கேற்ற வாறு வாழும் பழந்தமிழர் வாழ்க்கையின் சிறப்பினேயும். காணுங்கள் ! " . . . . . .

கைவல்கம்மியன் கவின்பெறப்புனைந்த செங்கேழ்வட்டம், தொகுவாய்க் கன்னல், பகுவாய்த்தடவு, யவனர் இயற்றிய வினைமாண் பாவை, புதுவதியன்ற மெழுகுசெய் படம் முக லாயின. அக்காலச் செல்வச் சிறப்பையும் தொழிலின் நுட்பத் தையும் உணர்த்துமாறும் காணுங்கள் !

கணவனைப் பிரிந்த மகளிர் கோலங் கொள்ளுதல் கூடாது; மாலையில் விளக்கேற்றி மலர்தூவி வணங்கல் மகளிர்க்கு அழகு என்ற மகளிர்தம் மாண்புகளும் உரைக்கப்பட்டுள்ளன.

வென்றெழு கொடியோடு வேழம் சென்று புகும் குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயிலும், நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றமும், ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பும், ஆறுகிடந்தன்ன அகல் நெடுந்தெருவும், வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளித் தெள்வளி தரூஉம் நேர் வாய்க் கட்டளையும் அக்கால மக்களின் கட்டடச் சிறப்பை உணர்த்துவனவாம்.

புண்பட்ட வீரர் போருக்குச் செல்லுதல் வேண்டா என்று அன்புரைகூறி அவர்களோடு நள்ளென் யாமத்தும் உறங்காதுஉறையும் பழந்தமிழ் அரசர்களின் பண்பு எத்துணைச் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுளது !. - . மலர்விரிதல் கண்டு மாலைப்போதினே உணரும் மகளிர்

தம் அறிவும் அழகாகக் கூறப்பட்டுளது. -

ஆயர்தம் ஆனிரைகளைக் கூறுங்கால், ஏறுடை இன நிரை ’ என்று கூறிய சிறப்பு உணர்தற் பாலது; காட்டில் நல்ல கால் நடைகள் வேண்டுமானல், அவற்றைத் தோற்று விக்க நல்ல காளேகள் தேவை; அதை அரசியலார் . உணர்ந்து ஆங்காங்கு அத்தகைய காளைகளைப் பேணி வளர்த்து வருகின்றனர்; இந்த உண்மையைப் பழந்தமிழர்

F.—8 - -: - -