பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 க் ோர்.

விளக்கம் அளிக்கும், அகநானூற்று அடிகளும், அதன் உரையும், நக்கீரர் குலம் அறிவார்க்குத் துணைபுரியா என்க.

கீர் என்ற சொல், வடமொழியில், சொல் அல்லது கலைக்கடவுள் எனப் பொருள்படும்; அக்கால மக்களுள், மதுரைக் கணக்காயனர் மகளுர் பெரும்புலமை பெற்றுப் புலவர்க்கெல்லாம் தலைவராய் விளங்கியமை கண்டு சொல் வல்லான்” என்ற பொருள் தோன்ற ரேன் எனப் பெயரிட் டனர் எனவும், அவர் புலமையும் பெருமையும் அறிந்து அறிஞர்கள், என்ற சிறப்புப்பொருள் உணர்த்துவ தோர் இடைச் சொல்லையும், உயர்வுகுறித்து வரும் உயர் திணை ஒருமைப்பன்மை உருபாகிய ஆர் என்பதையும், அவர் பெயர்க்கு முறையே முன்னும் பின்னும் கொடுத்து நக்கீரனர் என வழங்கினர் எனவும் கூறுவாரும் உளர். அவர் தொழிலும், குலமும், அறிவிக்கும் பாட்டு என வழங் கும் அப்பாட்டுள், கீர் கீர் என அறுக்கும் கீரன்’ என்ற் தொடரில் வரும், கீர் கீர்’ என்ற சொற்கள், சங்கறுக்குங் கால் உண்டாகும் கீர் கீர்’ என்ற ஒலி எனப்பொருள் படுவதும் காண்க. கீர்=ஒலி ; மொழி=ஒலிவடிவம். மொழிவல்லோன்=கீரன் ; இவ்வாறு, கீரன் என்ற பெயர்க் குத் தாம் கொண்ட காரணத்தை அவர்கள் நிலைநாட்டுவர்.

நக்ரேர் வாழ்ந்த சங்ககாலத் தமிழர்களிடையே சமயப்பூசல் இடம் பெறவில்லை ; கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற இயற்கைக் கடவுளரையே வழிபட்டு வந்த தமிழர் கள், காலம் செல்லச் செல்ல சிவன், திருமால், முருகன் போன்ற வைதீகக் கடவுளர்களையும் வணங்கத் தொடங்கி விட்டனர் ; சைவமும், வைணவமும் அல்லாமல் வேறுபிற சமயங்களும் அவர்களிடையே பாவி யிருந்தன; தமிழர்கள், தாங்கள் விரும்பிய சமயத்தை மேற்கொண்டு வாழஉரிமை பெற்றிருந்தனர்; ஒரு சமயத்தை மேற்கொண்டு வாழ்ந்த ஒருவர், சின்னுள் கழித்து அச் சமயத்தை விட்டு வேறு சம்யத்தை மேற்கொள்வதை அக்காலச் சமயவிதிகள் தடை செய்வதில்லை. இவ்வாறு சமய வாழ்வில் சமரசம் கிலவிய காலத்தில் வாழ்ந்தவர் நக்கீரர்.