பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு, குலம், சமயம் 5

என்ற அகநானூற்றுச் செய்யுளில் வரும் வேளாப்பார்ப் பான், பாகம் பண்ணுத ஊர்ப்பார்ப்பான், இவர்களுக்குச் :சங்கறுக்கையும் தொழில்’ என்ற பழைய உரையும் ஆகும்.

பார்ப்பான்’ என்பது ஒரு காரணப் பொதுச்சொல்; இச்சொல் அடையின்றிக் கூறுங்கால், இடுகுறி மாத்திரை யாய் ஒரு சாதியுட் பிறந்தான்ேக் குறிக்கும்; அடையொடு படுக்குங்கால், வேறு பிறரைத் குறிப்பதுமாகும். வேளாப்பார்ப்பார் என்பது கொற்ருெழில் புரியும் மரபினரைக் குறிப்பதாகும். பொற் கொல்லாகிய க்ம் மாளர்கள் தம்மை விசுவப் பிராமணர் எனக் கூறிக்கொள் வதற்கு ஆதாரம் இருத்தல் வேண்டும் ; அகப்பாட்டுரை காரர், ஊர்ப்பார்ப்பான்’ எனக் கூறுவதும் இக் கருத்துப் பற்றியே போலும். விசுவப்பிராமணன் எனினும் ஊர்ப் பார்ப்பான் எனினும் ஒக்கும். விசுவம் : உலகம், என்று கூறி, நக்கீரர் பார்ப்பாராகார்; வேண்டுமானுல், விசுவப் பிராமணர் குலத்தினர் எனக்கொள்ளுதல் கூடும் என்பதை ஒருவாறு ஒப்புக் கொள்வாரும் உளர். -

இக் கூற்றுக்கள் எல்லாம், இறையனர்க்கும், நக்ர்ேக் கும் சொற்போர் நடைபெற்றது என்ற கதிையினே அடிப் படையாகக் கொண்டுள்ளன ; அக் கதை ஆதாரமற்றது என்பது, பின்னர் நக்கீசரைப் பற்றிய கதைகளின் ஆர்ய்ச்சி யின்போது அறிவிக்கப்படும். அக் கதை ஆதாமற்றது; எனவே, குடமுடையான் வீழ்ந்தக்கால் குடமும் விழுந்த வாறு போல அக் கதையினே அடிப்படையாக்க் கொண்டு கூறப்படுவன எல்லாம் தள்ளப்படும் என உணர்க. அக் கதையினை நம்பி, நக்கீரர் தொழில் சங்கறுப்பது என்பதை ஏற்றுக்கொண்ட பின்னரே, சங்கறுப்போர் எக்குலத் தினர் என்பதை ஆராய்தல் வேண்டும்: அக் கதையின்யே ஏற்றுக் கொள்ளாதவழி, சங்கறுப்போர் யார்? அவர்குலம் யாது? என்பதை ஆராய்தல் அறிவுடைமை ஆகிாது, ஆகவே, சங்கறுப்போர் எக்குலத்தினர் என்பதற்கு