பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் காலமும் அவர்காலப் புலவர்களும் 25

கினர்; அதற்கான படையும் பண்பும் அவர்கள்பால் இருந்தன ; போரில் புறங்காட்டிப் பிழைக்கும் பிடி லாசை டவர் எனக் கொள்ளாது பெண்டிர் எனக் கொண்டு பழித்தனர்; தோற்ற வீரர்கள் கையில் வாளும் வேலும் தாங்கற்கு உரியர் அல்லர்; பெண்களைப்போல் பந்தும், பாவையும் கொண்டு ஆடற்குரியர் என அறிவிக்கும் முகத் தான்், தம் அரண்களின் தலைவாயிலில் பந்தையும், பாவை யையும் கட்டிவைத்தனர். தமிழ்நாட்டுப் பேரூர்களில் எல்லாம் கொடிபல துடங்கும் காளங்காடிகளும், அறங்கூர் அவைகளும், அரசரும் செல்வரும் வேனிற்காலத்தே இருந்து மகிழும் இலவந்திகைப் பள்ளிகளும் கிறைந்து காணப்படும்; தமிழகம் வெளிகாட்டு வாணிபத்தால் வளம் பெற்றுத் திகழ்ந்தது. - -

வேறுபல் காட்டின் கால்தர வந்த

பலவுறு பண்ணியம் இழிதரும் நிலவுமணல்.’ வெளியிலே மகிழ்ந்து ஆடுகிருர் சக்கீரர் வீடுகளில் போட்ட சோற்றுப் பலியினத் கின்ற காக்கைகள், கடலிடையே நிற்கும் கப்பல்களின் பாய்மரங்கள்மீது சென்று தங்கும் சிறப்பினேயும் காட்டுகிரு.ர்.

காக்கை, தாங்கல் வங்கத்துக் கூம்பிற் சேக்கும் மருங்கூர்ப் பட்டினம்.” பிறகாட்டு வாணிபத்தால் வளம் பெற்றதோடு, தமிழகம் பிறநாட்டுத் தொழில் வல்லார் பலரையும் பெற்றுத் திகழ்ந் தது; யவனர் கொணர்ந்த மதுவையும், அவர்கள் செய் தளித்த பாவைவிளக்குகளையும் பெற்று மகிழ்ந்தனர் தமிழர்கள் ; - . . . . 'யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்.’ 'யவனர் இயற்றிய வினைமாண் டாவை : - -

கையேந்து ஐஅகல்.” . (நெடுகல், கoஉ) தமிழர்க்கு நீர் உண்ணும் கலம் பொன்னலாயது : அவர் கள் வேனிற்காலத்தே குளிர்ந்த சக்தனம் பூசவேண்டும்;