பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - த க் கி ர ர்

கூதிர்காலத்தே வெப்பம்தரும் கத்தாரி அணியவேண்டும் என்றும், கோடையின் வெம்மை போக்க விசிறியும், குளி ரின் கொடுமை போக்கப் புகைதரும் கனற்சட்டியும், கோடையில் குடிக்கக் குளிர்நீர்தரும் வாய்குவிந்த கலங் களும் தேவை என்றும் அறிந்திருந்தனர். தம்மீது வீரர் கள் ஏந்திவரும் வெற்றிக் கொடியோடு யானேகள் நுழை யும் அளவு உயர்ந்த வாயில்களேயுடைய கோட்டையோன்ற மாளிகைகளைக் கட்டி வாழ்ந்தனர். தமிழர் புகைபோல் மெல்லிய ஆடைகளையும் பெற்று, அவற்றை மாசுபோகத் துவைத்துக் கஞ்சியிட்டுப் பெறவும் அறிந்திருந்தனர்! தமிழ்நாட்டுப் பாண்மகள், வாளைமீனுக்கு விலையாக நெல் லேப்பெற மறுத்து முத்தும் பொற்கலமும் பெற்று விற்கும் வாணிப வாழ்வை மேற்கொண்டு விளங்குகிருள். தமிழர் கள் செல்வமதிப்பீட்டு முறையினே நக்கீரர் ஒரு பாட்டில் விளக்குகிருர் : தமிழ்நாட்டுத் தாய் ஒருத்தி தன் மகள் வறியவன் ஒருவனே மணந்துகொண்ட கிலே கண்டு வருந்து கிருள்; அவள் வறுமை வாழ்வினள் என்பதை, அவள். வீட்டிற்கு ஒரே தாண்தான்் உண்டு என்றும்; அவள் வீட் டில் ஒரே பசுதான்் உண்டு என்றும் கூறுகிருள்; ஒர் ஆ யாத்த ஒரு தாண்முன்றில்” வீட்டு அமைப்பு முறை யினையும், வீட்டில் வாழ் பசுக்களின் எண்ணிக்கையினையுங் கொண்டே, தமிழர்கள் ஒருவரின் செல்வகிலேயினே மதிப் பிட்டு வந்தனர். - ... . . . . . . . .

தமிழர்கள், மணமாகா மகளிர்க்குக் காலில் சிலம் பணிந்து, அவர்கள் மணமாகாதவர் ; மணக்க விரும்புவோர் மணக்க முன் வரலாம் என அறிவித்து, அவர்கள் மணம் செய்துகொள்ளும் முன்காள், அச் சிலம்பைக் கழித்துவிட்டு, அவர்கள் மணம்பெற்ற மகளிராயினர்; இனி வேறு ஆடவர் எவரும் அவர்களே மனநோக்குடன் பார்த்தல் கூடாது என அறிவித்து வாழ்ந்தனர்; மன நாளன்று முன்னுள் நிகழும் இச் சடங்கைச் சிலம்புகழி நோன்பு எனப் பெயரிட்டுப் போற்றினர்; கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளன்று, தமிழர்கள், தெருக்க்ளில்