பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரரைப்பற்றிக் கூறும் கதைகள் 45.

ளாய்ப் பிறந்தன. அம் மக்கள், கலே பல அறிந்து கற்றுத் துறைபோய புலவர்மணிகளாயினர்; பின்னர், பல்வேறு. இடங்களுக்கும் போய், ஆங்காங்கிருந்த புலவர்களோடு வாதிட்டு வென்று இறுதியில் மதுரை சென்றனர்; ஆங்கே, ஆலவாய்ப்பெருமான், புலவர் உருவில் வந்து அவர்களே வரவேற்று உடன் கூட்டிச் சென்று மறைக் தார்; புலவர்கள் அவர் செயல் கண்டு வியந்து, வெவ்வேறு செய்யுட்களால் பாடிப் பரவுவாராயினர் ; பின்னர் ஆங். கிருந்து அரண்மனை அடைந்து பாண்டியன் வங்கிய சேகா னேக் கண்டனர்; அரசன் புலவர்களின் பெருமை அறிந்து, கோயில் வடமேற்கு மூலையில் அவர்கள் இருந்து தமிழாரா பத்தக்க சங்க மண்டபம் ஒன்றை அமைத்து, அதில் இருக்குமாறு அவர்களே வேண்டினன் அவர்களும் அவ. னளித்த வரிசை பலவற்ருேடு ஆண்டுச்சென்று அக மகிழ்ந்து அறிவாராய்ச்சி மேற்கொண்டு இருக்கலாயினர். மதுரையில் சொக்கநாதர் கடத்திய கிருவிளையாடல் களை அகத்தியர் சில முனிவர்களுக்கு அறிவிக்கும் முறை யில் எழுதப்பட்டுள்ள வடமொழி ஆலாஸ்ய மகாத்மியத் தில், நக்கீசர்முதலாம் புல்வர்களின் பிறப்பு முறை, பாஞ். சோதியார் திருவிளையாடல் பகரும் முறையினேயே முழு தும் ஒத்திருப்பதால் அதை மீண்டும் கூறுதல் தேவை யில்லை. - -

புலவர்கள் சங்கப்பலகை பெற்ற வரலாறு குறித்துக் கூறும் நூல்கள், பழைய திருவிளையாடல் எனப்படும் நம்பி திருவிளையாடல், பரஞ்சோதியார் திருவிளையாடல், வட மொழி ஆலாஸ்ய மகாத்மியம் முதலியனவாம். அவற்றுள், பழைய திருவிளேயாடல் கூறும் நிகழ்ச்சி இது

மதுரைச் சங்கமண்டபத்தே அமர்ந்து தமிழாராய்ந்து வந்த புலவர்கள், தங்கள் புலமையின் தகுதி திறமைகளுக் கேற்ப, வரிசையாக அமர்வதற்கு விரும்பினர்; அதற்கு அவர்கள் அனைவரும் ஒருங்கிருக்கத்தக்க பேராசனம் ஒன்று தேவைப்பட்டது. அதல்ை, நக்கீரர், கபிலர், Liss னர் முதலாம் புலவர்கள் அனைவரும் கோயிலை அடைந்து