பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரரைப்பற்றிக் கூறும் கதைகள் 61

இவ்வாறு நக்கீரர் வரலாறு உரைக்கும் நூல்களாகிய, பரஞ்சோதி திருவிளையாடல், நம்பி கிருவிளையாடல், காளத்திப் புராணம், பாங்கிரிப் புராணம் ஆகிய நான்கும், ஒரு புராணம் கூறிய வரலாற்றை ஒரு புராணம் கூருமையும் ஒரு புராணத்தில் ஒரு வகையாற் கூறப்பட்ட நிகழ்ச்சி ஒரு புராணத்தில் முற்றிலும் மாறுபடக் கூறப்பெறுவதும் ஆய இயல்புகள் உடையவாய்க் காணப்படுகின்றன; மேலும், அக் கதைகளின் நிகழ்ச்சிகளைக் காரண காரியம் கொண்டு ஆராயின், அவை அவ் வெல்லைக்குள் அடங்காது விரிந்து செல்லும் இயல்பினவாய்க் காணப்படுதலின், அவற்றின் உண்மை அன்மைகளே அறிதல் அருமையுடையதாம். ஆதலின், அவற்றை அறிவோர், கம் அறிவின் திறம் கொண்டு துணிந்து கொள்வார்களாக,