பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. நக்கீரர் இயற்றிய நூல்கள்

நக்கீரர் இயற்றிய பாக்களாக, எட்டுத்தொகை, பத்துப் பாட்டு நூல்களில் காணப்படுவன முப்பத்தேழு பாடல்களாம். நற்றிணை யில் ஏழு; குறுந்தொகையில் எட்டு ; அகநானூற்றில் பதினேழு, புறநானுற்றில் மூன்று; பத்துப்பாட்டில் திருமுரு காற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய இரண்டு.

இவையேயன்றி, பதினோங் திருமுறையில் காணப் படும் (க) கைலையாதி காளத் திபாதி அந்தாதி, (உ) திருவிங் கோய்ப?ல எழுபது, (ங்) திருவலஞ்கழி மும்மணிக்கோவை. (ச) திருவெழு கூற்றிருக்கை, (டு) பெருந்தேவபாணி, (சு) கோபப்பிரசாதம், (எ) கரெட்டு, (அ) போற்றித் திருக்கலி வெண்பா, (சு) திருக்கண்ணப்ப தேவர் திரு தம் ஆகிய ஒன்பது நூல்களும் (கo) நக்கீரர் நாலடி. நாற்பது என்ற நூலும் ஆகப் பத்து நூல்களையும் இயற்றியவர் நக்கீரரே என்று கூறுவர் சிலர். -

இவைகளுடன், திருமுருகாற்றுப்படைக்குப் பின் வரும் குன்றமெறித்தாய்” எனத் தொடங்கும் வெண்பா முதலாம் பத்து வெண்பாக்களையும், தான்ே முழு துணர்ந்து ’ என்ற திருவள்ளுவமாலைச் செய்யுளையும், தன்குடி கூறிப் பழித்த பரமனுக்குப் பதில் கூறும் முகத் தால் பாடிய சங்கறுப்பது எங்கள் குலம்’ என்ற வெண் பாவையும், 'ஆரியம் நன்று ; தமிழ் தீது’ என்றுரைத்த கொண்டான் என்னும் குயவனைச் சாவவும், வாழவும் பாடிய பாக்கள் எனப்படும் முரணில் பொதியின்,” ' ஆரியம் நன்று” என்ற வெண்பாக்களேயும் பாடிய வரும் நக்கீரரே என்பர். இச் செய்யுட்களே அல்லாமல், இறையனுள் இயற்றிய களவியல்’ எனப்படும் அகப் பொருள் நூலுக்கும் நக்கீானர் உரை எழுதினர் என்ப.

இவற்றுள் களவியல் உரை, நெடுநல்வாடை, திரு முருகாற்றுப்படை ஆகிய நூல்களைப்பற்றிப் பின்னர்த் தனித்தனித் தலைப்புக்ளின் கீழ் ஆராயப்படும். எட்டுத் தொகை நூல்களில் வரும் நக்கீரர் பாக்களைக் கொண்டே