பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - ந க் கீ ர்

(ச) திருவெழுகூற்றிருக்கை -இஃது ஒரே செய்யு ளேக் கொண்ட ஒரு நூல். இணைக்குறள் ஆசிரியப்பாவால் இயன்றது ; ஒருவகை எண்ணலங்காரம் தோன்றப் பாடப் பெற்ற சித்திரச் செய்யுள்.

(டு) பெருந்தேவபாணி :-தேவபாணியாவது, தெய் வத்தை முன்னிலைப்படுத்திப் பாவும் ஒருவகைப் பாட்டு. இது தனக்குப் பயன் உண்டாகச் சிவபெருமானே முன்னிலைப்படுத்திப் பாடப்பெற்றுள்ளது.

(சு) கோபப் பிரசாதம் :-இறைவன், மறக்கருனே யும் அறக்கருணையும் ஆய இரு பெரும் குணம் உடையவன்; தீயோரை மறக்கருணை கொண்டு தண்டித்துத் திருத்தி கல்வழிப்படுத்தலும், நல்லோர்க்கு அறக்கருணை காட்டி நன்னிலையில் கிறுத்தலும் செய்வன். இம் முறையினை அடிப்படையாகக் கொண்டு, சிவபெருமான், மறக்கரு யும் அறக்கருணையும் கொண்டு செய்த அருட் செயல்களே அடுத்தடுத்துக் கூறும் ஒரு நூல்; அதனலேயே கோபப் (மறக்கருணை) பிரசாதம் (அறக்கருணை) என்ற பெயர் பெற்றது. இணைக்குறளாசிரியப்பாவால் இயன்றது.

(எ) காாேட்டு :-இறைவன் திருவடிக்கண் அன்பு கொண்டார் இயற்கைக் காட்சிகளை எல்லாம் இறைவன் திருவுருவங்களாகவே கொள்வர் என்ற உண்மையினே உணர்த்துவது. கார் காலத்து முகில விளக்கிப் பாடும் எட்டு நேரிசை வெண்பாக்களால் ஆகிய ஒரு சிறு நால். முகிலின் கருமை நிறமும், மின்னலும் சிவபெருமானின் நீலகண்டம், செஞ்சடை ஆகியவற்றை முறையே ஒத்துள் ளன என்ற பொருள்படப் பாடப்பெற்றுள்ளது.

(வு) போற்றித் திருக்கலி வெண்பா:-கலிவெண் பாவாலாகிப் போற்றி என்னும் வாய்பாடு கொண்டு இறைவனைப் போற்றிப் பரவும் ஒரு சைவ சமயச் சார் புடைய நூல். -

(கூ) திருக்கண்ணப்பதேவர் தி ரு ம ற ம்:-சைவ நாயன்மார்களுள் ஒருவராகிய கண்ணப்ப நாயனர் வரலாற்