பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் இயற்றிய நூல்கள் 65,

றைச் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் என்னும் சுவைகள் தோன்றுமாறு கூறும் ஒர் அகவற்பாவால் ஆய தொரு நூல்.

இனி, இந் நூற்கள் நக்ரோல் பாடப் பெற்றன அல்ல எ ன் ப த ற் கு ஆதாரமாகக் கூறப்படுபவனவற்றையும், அவற்றை மறுத்து இவை அவராற் பாடப் பட்டனவே என்பதற்கு ஆதா மாசு க் கூறப்படுபவனவற்றையும் முறையே காணல் நன்று; இவை நக்கீசரால் பாடப் பட்டன அல்ல என்பார் கூறுவன :- .

(அ) இப் பாக்களில், கட்டளைக்கலித்துறைச் செய் யுட்கள் கலந்து வருகின்றன. கட்டளைக்கலித்துறை போன்ற பாவினங்களைச் சங்ககாலப் புலவர்கள் வழங்க வில்லை. .. -

(ஆ) அக்தாதி, மும்மணிக்கோவை போன்ற நூல் களேப் பழக்தமிழ்ப் புலவர்கள் மேற்கொண்டிலர்; இவை போன்ற நூல்களுக்குத் தொல்காப்பியத்தில் இலக்கணம் வகுக்கப்படவில்லை. நக்கீரர் இயற்றியன எனக் கூறப்படும் இந்நூல்கள், அந்தாதியாகவும் மும்மணிக் கோவையாகவும் உள்ளன. - ‘. . .

(இ) எட்டுத் தொகையில் வரும் நக்கீசர் பாடல்கள் அவர் பாடிய திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை ஆகிய சங்கப் பாடல்களுக்கும். இந்நூல்களுக்கும் உள்ள இடைவேற்றுமை மிக மிகப் பெரிது.

(I.) அக்தாதி போன்ற இந்நூல்கள் பிற சமயங் களைப் பழிக்கும் பண்பின ; சங்க நூல் பாடிய நக்கீரர் சம நெறியில் சமரச உணர்வுடையவர். . .

(உ) சங்கச் செய்யுட்கள் உரையாசிரியர்களால் மேற்கோட் செய்யுட்களாக எடுத்தாளப் பெற்றுள்ளதே போல் இந்நூல்கள் அவரால் ஆளப்பெறவில்லை. . . . . -

இக்காரணங்கள் பொருந்துவன அல்ல என்பார் கூறு வனவற்றை இனிக் காண்போம் :- - . .

ந.-5