பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-நக்கீரர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் உரை 8}

ழாாாய்க்கது ஆயிரத்தெண்னூற்றைம்பதிற்றியாண்டு

என்ப, அவர்களேச் சங்கமிரீஇயினர் கடல் கொள்ளப்பட்

டுப் போக்கிருந்த முடத்திருமாறன் முதலாக, உக்கிப்

பெருவழுதியிருக நாற்பத்தொன்பதின்மரென்ப. அவ. ருட் கவியரங்கேறிஞர் மூவர் பாண்டியரென்ப. அவர் சங்க

மிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை யென்ப. ”

இவ் வரலாற்றுள், உண்மையென ஏற்றுக் கொள்ளத் தகாதன சிலவும் உள. எனினும், முச்சங்கத்தையும் முச் சங்கம் இருந்த இடத்தையும், அவற்றில் இருந்து தமிழா ாய்ந்த புலவர்களையும், புலவர்களேப் போற்றிச் சங்கத் தைப் பேணிது அரசர்களேயும் அறிய, இது நமக்குப் பெருந்துணைபுரிதல் காண்க. .

களவியல் உாை, இவ்வாறு வரலாற்றுச் சிறப்புடைய தாதலே யன்றி இலக்கியச் சிறப்பும் உடையதாம்; உரை நடை, இலக்கியச்செறிவுடைய இனிய கடைவாய்ந்தது; கற்பார்க்குக் கழிபேருவகைதரும் கவினுடையது.

கொழுச்சென்றவழித் துன்னுசி இனிது செல்வதுபோல், ஆவிற்கு இருகோடுபோல், புனலோடுவரிப் புற் சாய்ந்தாற் போல், நாண் வழிக் காசுபோல், நீர்வழி மிதவை போல, குன்ற முருண்டாற் குன்றி வழியடையாகாவாறு போல், கடல் வெதும்பின் வளாவு நீரில்லது போல என்பன போன்ற அழகிய உவமைகளாலும், t இனியாரொடு தலைப்பெய்த இடங். கண்டாலும் அவ்வினியாரைக் கண்டாலே போல்வது உலகத்துத் தன்மை, உலகத்தோர் இடுக்கணுற்றல் விதியானே தீருமென் றிரார்; முன்னே தீர்ப்பதற்குச் சுற்றத்தாரையும், நட்டாரையும் நினைப்பர்,” “உலகத்து ஒரு பொருண்முடியாதெனக் கவன்று நின்றர் முடிப்பதோர் உபாயங் கண்ட ஞான்று ஆப் பொருள் யெய்தினுரே போல மகிழ்வர்” போன்ற சொற்ருெடர்களுர், லும் கிறைந்து விளங்கும் நீர்மை புடையது.