பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மாநகர்ப் புலவர்கள்

வரை நோக்கி ஏந்திய வேலினும் கொடுமை மிக உடைய, தாம்; நம் தலைவியின் தோள்களோ, அக்கரிகாற் பெரு வளத்தான்் செங்கோல் நிலவும் ஆட்சியினும் மிக்க இன் பத்தைத் தரும் தண்ணளி நிறைந்தனவாம்; ஆதலின் நெஞ்சே பிரிந்து சென்று பெறும் பொருள், அக் கரிகால ணுக்கு உரியதும், பல்வளமும் பொருந்தியுள்ளமையால் குறைவறு வாழ்வுடையதுமாய காவிரிப்பூம்பட்டினமே யர்யினும், யான் இவளைப் பிரிந்துவாரேன்," எனக் கூறினன் ஒரு தலைமகன் எனப் பாடிய பட்டினப்பாலேயால் அக்கால ஆண்மகன் உள்ளத்தை உணரத் துணைபுரிந்: துள்ளார் புலவர். -

முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன்; வாழிய நெஞ்சே......' (பட்டினப் : உக அ-உ0)

திருமா வளவன் தெவ்வர்க்கு ஒக்கிய வேலினும் வெய்ய கானம்; அவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே." .. - (பட்டினப் : உகக- ட0க) வெளவால்கள் பகற்காலமெல்லாம் பழைய மரங்களில் பதுங்கியிருந்துவிட்டு, மாலே வந்துற்றதும் பழம் நிறைந்த மரங்களைத் தேடிச்சேறல் என்றும் நிகழ்வது; ஆனால், கணவன் பிரியாதிருக்கப் பெண்டிர்க்கு, அவனோடு அள வளாவிகிற்பதற்கே நேரமின்மையால், அவர்கள் அப்போது மாலைக் காலத்தையோ, அக்காலத்தே பழம் தேடிச் செல்லும் பறவையினேயோ காணல் இயலாது; அவர் பிரிந்துவிட்டாராயின், அம்மகளிர் மாலையைக் காணக்கான வருந்துவர் அவர்க்கு அக்காலே வேறு தொழில் இன்மை யால், தம் தொழிலாற்றித் தம் கூடு அடையும் பறவை. களேயே அன்றி, அப்பறவைகளுக்கு மாருக, அவை கூடு திரும்பும் அக்காலத்தே தன் வாழிடம் விட்டுப் பழமரம் தேடிப்போகும் வெளவாலேயும் நோக்கிகிற்பள்; அதன் தொழில்ே அன்றி, அதன் உடலமைப்பும் அவளால்