பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. கருங்குள வாதனுர்

ஆதனுர் என்ற இயற்பெயருடைய இவர் பிறந்த :ஊராகிய கருங்குளம் பாண்டிநாட்டில் உளது; அஃது இக்காலே, கோட்டைக் கருங்குளம் என வழங்குகிறது. கல்வெட்டுக் காலத்தே, ‘கருங்குள வளநாட்டுக் கரிகால சோழ கல்லூரான கருங்குளம்" (A. R. No 269 of 1928). என வழங்கப்பட்டுளது. இவர், கரிகாற் பெருவளத் தான்ப் பாடியுள்ளமையாலும், இக் கருங்குளம், கரிகால் சோழ நல்லூரான கருங்குளம் என அழைக்கப்பெற்றுள்ள மையாலும், இவ்வூர், கரிகாற் சோழல்ை, தன்னைப் பாடிய ஆதனுர்க்குத் தன் பெயரால் தரப்பட்ட தனிச்சிறப்புடைய தாம் எனக்கோடல் பொருந்தும். ஆதன் என்ற பெயர், சேர வேந்தருள் சிலர்க்கு இட்டு வழங்கும் இயற்பெயரா தலின் இப்புலவர் கருங்குள ஆதனுர், அச்சேரவரச இனத் தோடு, தொடர்புடையவராவர் எனவும் கொள்க. இவர் பெயர் ஏடுகளில் க்ருங்குழலாதனுர் என இருத்தல் கொண்டு, இவரைப் பெண்பாற் புலவருள் ஒருவராகக் கொள்வதும் உண்டு. இவர், கரிகாற் பெருவளத்தான்் காலத்தே வாழ்ந்து அவன் வெற்றிச்சிறப்பினே விளங்கப் பாடிப் பரவியதோடு, அவன் இறந்தபின்னரும் இருந்து

பாடி இரங்கியும் உள்ளார்.

கரிகாற் பெருவளத்தான்், இரவென்றும் பகலென்றும் பாராளுய்ப் பகைவர் நாடுகளைப் பாழ்செய்து மகிழ்வதே தொழிலாகக்கொண்ட போர் வெறியுடையணுய் விளங்கு வதால், அவன் பகைவர் நாடுகள் அனேத்தும், தம் வளம் முற்றும் இழந்து வறுமையுற்று, வனப்பிழந்து வாடிக் கெடுதலைக் கண்டுகண்டு கலங்கிய கருணைநிறை உள்ளத் தராய நம் புலவர், கரிகாற் பெருவளத்தான்் முன்சென்று அவன் பகைவர் நாட்டில் எழுப்பிய பெருந்தீவிளக்கம், தங்கள் நாடு அவன் இட்ட பெருந்தியால் பாழாவது கண்டு அம்மக்கள் எழுப்பும் அழுகைப் பெருங்குரல், அவன் அப் பகைவர் நாட்டினின்றும் கைப்பற்றிய கணக்கிடலாகாப்