பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய் 27

  • ? * * ' உரைப்பார் உரைப்பவையெல்லாம் இாப்பார்க் கொன்று சவார்மேல் கிற்கும் புகழ்” என்ப. ஞாயிறு உலகிற்கு உயர்ந்த இடத்தே இருந்து உலகெலாம் காண விளங்கு கிறது. ஆயினும், அதன் காட்சி, வருவார்க்கெலாம் வழங் கும் வள்ளியோயை ஆயின் புகழ்க்காட்சிபோல் உயர் வுடையதாகாது என்று கூறுகிருர் முடமோசியார் : ' கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல

வண்மையும் உடையையோ? ஞாயிறு ! கொன்விளங் குதியால் விசும்பி ேைன.”

(புறம்: க.எச) இமயம் சேர்ந்த காக்கையும் பொன்னிறம்பெறும்; மலரொடு சேர்ந்த நாரும் மணம்பெறும் என்றெல்லாம் கூறுவர்; ஆய், அருட்பெரும் வள்ளல்; ஆகவே, அவன் நாட்டு வாழ்வார்பாலும் அவ்வருள் உள்ளம் குடிகொண்டு விட்டது . அவன் நாட்டுக் குறவர்கள், பாணர் முதலாம் இாவலரை எதிரே காணின், உடனே, தம் வில்லால் வீழ்த்திய முள்ளம்பன்றியின் கொழுத்த ஊனேயும், தம் மலையகத்தே கிளேத்துவளரும் சந்தனக் கட்டையையும், யானேக் கோடுகளேயும் புலித்தோலில் வைத்து வழங்கி வழி படுபவர் எனின், வருவார்க்கு வழங்கும் ஆயையும், அவன் காட்டையும் வாழ்த்தாதார் உளரோ :

" சிலப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை விடர்முகை அடுக்கத்துச் சினே முதிர்சாந்தம் புகர்முக வேழத்து மருப்பொடு மூன்றும் இருங்கேழ் வயப்புலி வரியதட் குவைஇ விருந்திறை கல்கும் நாடன் எங்கோன் கழல்தொடி ஆஅய் அண்டிரன்.' (புறம்: -எச) ஆய் அண்டிரன், தன் அரசவை அமர்ந்து, ஆங்கு வரும் இரவலர்க்கெல்லாம் வழங்கும் நெடியபல தேர்களை யும், அத் தேரிற் கட்டிய மணிகளின் ஒலியையும் கண்டும், கேட்டும், அவன் நாளோலக்கச் சிறப்பினே கணிமிகப் பாராட்டியுள்ளார் நற்றிணைப் புலவர்ஒருவர்.