பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வள்ளல்கள்

螺蒙 ஆஅய், -

வண் மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற பண்ணமை நெடுங்தேர்ப் பாணியின் ஒலிக்கும் '

(நற்: க.க.எ) இவ்வாறு கொடைபாற் சிறந்த குன்றென கின்ற ஆய் அண்டிசன் இறந்துவிட்டான்; வருவார்க்கெல்லாம் வாரி வழங்கிய வள்ளலாய ஆய், இம்மையில் இறப்ப உயர்ந்த வாழ்வுடையனைதைப் போன்றே, மறுமையிலும் வாழ்வாங்கு வாழ்தல்வேண்டும் என விரும்பினர் அக்கால மக்கள் எல்லாம்; அவர் உள்ள வேட்கை, உறையூர்ப் புலவரின் உள்ளத்தே ஒர் அழகிய பாட்டாக உருப்பெற். றெழுந்தது; முடமோசியார், இாவலர்க்குத், தேர்பல ஈந்த இனியோனுய ஆய், விண்ணவர் வேந்தனும் பிறரும் முரசு முதலாயின முழங்க, ஆடல் மகளிர் சூழவந்து வரவேற்றுப் பெருமைசெய்ய, ஆண்டு இனிதுவாழும் வாழ்க்கையினேக் தம் அகக்கண்களால் கண்டார்; ஆங்கு அவனே வரவேற். ங்கால் எழுந்த ஆரவாரப் பேரொலியைக் கேட்டும் அக மிக மகிழ்கிருர் : . .

திண்டேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்

அண்டிரன் வரூஉம் என்ன, ஒண்தொடி வச்சிரத் தடக்கை கெடியோன் கோயிலுள் போர்ப்புறு முரசம் கறங்க ஆர்ப்பெழுங் தன்றால் விசும்பி னானே. (புறம்: உசக) முடமோசியார், ஆய் ஆண்டுப்பெறும் இன்ப வாழ்வு கண்டு அகம் மகிழ, குட்டுவன் கீரனுர், ஆயை இழந்த புலவர் முதலாம் இரவன்மாக்கள், வறுமையால் வாடி வற்றிய வயிற்றினாய், ஒளிஇழந்த கண்ணாய், ஒட்டிய உடலினாய்த் தம் பெருஞ் சுற்றம் தம்மைப்போன்றே வருந்தித் தம் பின்தொடர்ந்துவர்த் தம்மைப் பேணிப் புரக்கும் பிறநாடுகளைத் தேடித்திரியும் அவலநிலையை எண்ணி பெண்ணி இரங்குவார்போல், ஆயின் பிரிவுகண்டு பெரிதும் வருந்துவராயினர்; இவ்வாறு உலகெலாம் வருந்த, மறைந்த ஆயின் மாண்புகழ் வாழ்க வாழ்க என

வாழ்த்துவோமாக!