பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரி 43

வாழ்ந்தால், அவன்பால் பரிசில் பெறப் பலரும் வருவர்; வந்தவர்க்கெல்லாம் தம்மிடம் உள்ளதை இல்லையென்னுது கொடுப்பது எவர்க்கும் எளிது; அதை எவரும் செய்வர்; அதற்கு மனம் ஒன்றே போதும்; ஆனால், பரிசில் பெற வருவோர் அனைவரும் ஒரே தகுதியுடையவரல்லர்; ஆகவே, அவர்களின் தகுதி நோக்கி, இவர் மிகச் சிறந்தார்; இவர் சிறந்தார்; இவர் அத்துணைச் சிறந்தால்லர் என அறிந்து அதற்கேற்பப் பரிசில் அளிப்பது எளிதன்று; அதற்கு மனம் ஒன்றே யிருத்தல் போதாது; வரிசை அறியும் அறி வும் தேவை; கின்பால் அவை யிரண்டும் இருக்கும் என எண்ணியே வந்தேன்; ஆனல் வரிசை அறியும் அறிவு கின் பால் இருக்கக் காண்கிலேன்; நீ மனம் ஒன்றே படைத்தவ தைலே விரும்பவில்லை; மனத்தோடு வரிசை யறியும் அறிவும் பெற்ற மன்னனுகவே உன்னேக் காண விரும்புகின்றேன் ; பொது நோக்கு நோக்காது, வரிசையா நோக்குதல், என் போல்வார்க்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு, தும்போல் வார்க்கு ஆக்கமும் கரும்; ஆகவே, வத்தோர் அனேவரையும் ஒன்றென மதியாது, அவர் தகுதி அறிந்து மதித்து, அதற் கேற்பப் பரிசில் கொடுக்கும் வழக்கத்தினை இனியாயினும் மேற்கொள்வாயாக!” என்று அறிவுறுத்தினர்; கபிலரின் புலமைச் சிறப்பும், பிழை கண்டு பொரு அவர் உள்ளத் துயர்வும் உணர்ந்த காரி, அவர் மகிழும் வண்ணம் மேலும் பல பரிசில் அளித்துப் பெருமை செய்தான்்.

ஒருதிசை ஒருவனே உள்ளி காற்றிசைப்

பலரும் வருவர் பரிசில் மாக்கள்; வரிசை அறிதலோ அரிதே; பெரிதும் ஈதல் எளிதே மாவண் தோன்றல்! அது நன்கு அறிந்தனே யாயின், பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே."(புறம்: கஉக) காரியால் சிறப்புச் செய்யப் பெற்று அவன் அவைக் களத்தே சில நாள் வாழ்ந்த கபிலர், அக் காலத்தே அவன் பால் அருங்குணங்கள் பல அமைந்து கிடக்கக் கண்டார்; அவை அவர் உள்ளத்தைக் கொள்ளே கொண்டன; கபிலர்