உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வள்ளல்கள்

காலத்தில் வள்ளல்களாக விளங்கியோர் பலர்; அவர்கள் தம்மை நோக்கி வந்தவர்கட் கெல்லாம் தேர் பல கொடுத் துச் சிறப்புச் செய்கின்றனர் என்ருலும், அவர்கள் அவ் வாறு அளிப்பது மதுவுண்டு மகிழ்ந்திருக்கும் காலத்தி லேயேயாம்; மதுவுண்ட காரணத்தால், தாம் செய்வது யாது என்பதை அறிய மாட்டா மயக்க கிலேயுற்றுவிடுகின் றனர்; அதனுல் கொள்வோர் தகுதியும், கொடுக்கும் பொரு ளின் அருமையும் அறியாது போகின்றனர்; ஆகவே, அங் கிலேயில் அவர்கள் பரிசில் அளிப்பது தம் இயற்கையறிவோ டிருந்து செய்யும் செயலாகாது; ஆகவே, அது அவர்க்குப் பெருமைக்குரியதுமாகாது; ஆனால், காரி மதுவுண்டு மகிழ்ந்தறியாதவனுவன் ; ஆகவே, தான்் செய்வதன் நன்மை தீமைகளே உணரும் நல்லறிவோடிருப்பவன் ; அவன் பரிசில் அளிக்கிருன் என்றால் , அது அவன் இயற்கையறிவோடு கூடிய செயல்; கொடுப்போர் தகுதியும், கொடைப் பொருளின் அருமையும் அறிந்து செய்த செய லாம்; அங்கிலையிலிருந்து அவன் கொடுத்த தேர்கள் பல; அவனுக்குரிய முள்ளூர் மலைக்கண் பெய்த மழைத்துளி களே எண்ணினும் எண்ணலாம்; அவன் பரிசிலாகக் கொடுத்த தேர்களே எண்ணிக் காணல் இயலாது; காரிபால் அமைந்துகிடந்த இவ் வரும்பெரும் சிறப்பினே அறிந்து

பாராட்டினர் கபிலர் :

“ நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின் யார்க்கும் எளிதே தேர்ச தல்லே; தொலயா நல்லிசை விளங்கும் மலேயன் மகிழாது ஈத்த இழையணி நெடுங்தேர் பயன்கெழு முள்ளுர் மீமிசைப் பட்ட மாரி உறையினும் பலவே.' (புறம்: க.க.) மலைபமான் திருமுடிக்காரி புலவர் பலரின் பாராட் டைப் பெற்ற பெருமையுடையவன்; அகம், புறம், நற் றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நாலிலும், பத்துப் பாட்டுள் ஒன்முகிய சிறுபாணுற்றுப் படையிலும் அவன் பாராட்டப் பெற்றுளான்; அம்மூவர்ை, கபிலர், கல்லாட