பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வள்ளல்கன்

வாறே நாள்தோறும் காலையில் கூட்டமாகக் கோட்டை யைக் கடந்துசென்று, மாலையில் கதிர்களுடன் மீள்வவா யின; இதனல், அகவாழ்வோர் அரிசி உணவும் பெற்று அக மகிழ்ந்தனர்; அரணைக் காக்கலாம் உரனும், உள்ளமும் உடையாயினர்; உற்றுழி உதவும் கபிலரின் இவ்வரும் பெரும் பணியினைப் போற்றிப் புகழ்ந்தனர் ஒளவையாரும் நக்கீசரும்:

புலங்கங் தாக இரவலர் செலினே,

வரைபுரை களிற்ருெடு நன்கலன் ஈயும் உரைசால் வண் புகழ்ப் பாரி பறம்பின் கிறைபறைக் குரீஇயினம் காலப் போகி முடங்குபுறச் செங்கெல் தரீஇயர் ஒராங்கு இரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப் படர்கொள் மாலைப் படர்தங் தாங்கு. (அகம் : கூ0க.) உலகுடன் திரிதரும் பலர்புகழ் கல்லிசை - வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்கின்று செழும்செய் நெல்லின் விளேகதிர் கொண்டு தடக்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி யாண்டுபல கழிய வேண்டுவயின் விழையாது தாளிடு உக் கடந்து, வாளவர் உழக்கி ஏந்துகோட்டு யானே வேந்தர் ஒட்டிய - கடும்பரிப் புரவிக் கைவண் பாரி. ..(அகம்: எ.அ) முற்றுகையிட்டுப் பணியவைத்தல் மூவேந்தால் இய லாது என்பதைப் பாரி அறிவான் எனினும், மூவேந்தால், பறம்பு முற்றுகையிடப்பட்டுள்ளது என்ற இழிசொல் கேட் கவும் அஞ்சின்ை; ஆகவே, முற்றுகை நாள் பல நீடிப்பதை வெறுத்தான்், பறம்பினின்றும் அவரை வென்று துரத்து தல் வேண்டும் என்று முடிவு செய்தான்்; ஒருநாள் வீரர் சூழ வெளியே வந்தான்்; வாள்வலி காட்டிப் போரிட்டான்; அவன் தாக்குதல் எதிர்பாராதது; ஆகவே, வேந்தர்படை, வேள் பாரியின் வாள்வீரர் முன் எதிர்த்துகிற்க மாட்டாது நிலைகுலைந்து தோற்றது; பாரி, பேரரசை ஒட்டி வெற்றிப் புகழ்பெற்று விளங்கினன். - -